விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் ஸ்டாலினின் திரைப்பயணம் – வாழ்வில் உயர்ந்த கதை!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர் ஸ்டாலினின் திரைப்பயணம் - வாழ்வில் உயர்ந்த கதை!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர் ஸ்டாலினின் திரைப்பயணம் - வாழ்வில் உயர்ந்த கதை!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் ஸ்டாலினின் திரைப்பயணம் – வாழ்வில் உயர்ந்த கதை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூத்த அண்ணனான நடித்து வரும் நடிகர் ஸ்டாலின் சுமார் 12 ஆண்டு காலங்களாக சின்னத்திரை பயணத்தை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். இவரது சினிமா பயணம் குறித்த சில நிகழ்வுகளை இப்பதிவில் காணலாம்.

நடிகர் ஸ்டாலின்

சினிமாவை பொறுத்தவரை வாய்ப்புகள் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட சரியான நேரம் அமைய வேண்டியது மிக முக்கியமாகும். அந்த சரியான நேரம் என்பது அமையும் போது, சினிமா உலகம் ஒரு நடிகரின் கடந்த கால வாழ்க்கையை பெருமையோடும், மதிப்போடும் திரும்பி பார்க்கும். அந்த வகையில் சின்னத்திரை உலகில் சுமார் 12 ஆண்டு காலமாக தனது பயணத்தை தொடர்ந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் ஸ்டாலின் தற்போது மக்களின் மனதுக்கு ஏற்ற நடிகராக உயர்ந்து நிற்கிறார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் விவரம் – வெளியான பட்டியல்! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் சொந்த அண்ணன் மகனான ஸ்டாலின் முதன் முதலில் அறிமுகமானது சின்னத்திரையில் தான். இவரது அப்பா பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி இருந்தாலும், ஸ்டாலினுக்கு சிறு வயது துவங்கி சினிமாவில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘தெற்கத்தி பொண்ணு’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார் நடிகர் ஸ்டாலின்.

என்னதான் சினிமா பின்புலம் உள்ளவராக இருந்தாலும் எவ்வித பரிந்துரைகளும் இல்லாமல் உழைப்பு மற்றும் திறமை மூலம் இதுவரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகர் ஸ்டாலின். குறிப்பாக விஜய் டிவியில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இருந்து வரும் இவர் 7C, சரவணன், மீனாட்சி, ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த தொடர்களின் மூலம் கணிசமான ரசிகர்களை பெற்றிருந்த ஸ்டாலின், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் ஒவ்வொரு தமிழ் மக்களின் குடும்பத்திலும் மூத்த அண்ணனாக மாறக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இவர் நடித்து வரும் மூர்த்தி கதாபாத்திரம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானதாகும். குறிப்பாக சீரியலில் இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும், அது நடிப்பு என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக காணப்படுவது உண்டு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சமீபத்தில் ஒளிபரப்பான மூர்த்தி அம்மாவின் இறுதி சடங்கு காட்சிகள் இவரது நடிப்பிற்கு தக்க சான்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!