பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி வெளியிட்ட ட்வீட் – கடுப்பான ரசிகர்கள்!

0
பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி வெளியிட்ட ட்வீட் - கடுப்பான ரசிகர்கள்!
பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி வெளியிட்ட ட்வீட் - கடுப்பான ரசிகர்கள்!
பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி வெளியிட்ட ட்வீட் – கடுப்பான ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் குறித்து கணிக்கச் சொல்லி விஜய் டிவி ட்வீட் செய்வது ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6:

வழக்கமாக விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதற்கு காரணம் அதில் புதுமையான பல கன்டன்ட் இருப்பது தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பல மொழிகளில் வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி 5 ஆண்டுகளுக்கு முன் தமிழில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்நிலையில் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக ப்ரோமோ வெளியாகி அதை உறுதிபடுத்தி இருக்கிறது. பிக்பாஸ் ப்ரோமோ வெளியானது முதல் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவும். அந்த வகையில் இந்த சீசனிலும் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரங்கள் தினமும் ஒரு வீடியோவாக வந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை – குஷியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்!

Exams Daily Mobile App Download

அது போதாது என விஜய் டிவியும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பற்றி கணித்து சொல்லுங்கள் என வெளியிட்டுள்ள பதிவை பார்த்து ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். நாங்கள் சொல்லும் போட்டியாளர்களை அழைத்து வரவா போறீங்க என ரசிகர்கள் கடுப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக். 9 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அதன் பின் தான் போட்டியாளர்கள் குறித்து உறுதியாக தெரிய வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!