திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின் தாய், தந்தை ஆன விஜய் டிவியின் ரியல் ஜோடி – வளைகாப்பு போட்டோ வைரல்!

0
திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின் தாய், தந்தை ஆன விஜய் டிவியின் ரியல் ஜோடி - வளைகாப்பு போட்டோ வைரல்!
திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின் தாய், தந்தை ஆன விஜய் டிவியின் ரியல் ஜோடி - வளைகாப்பு போட்டோ வைரல்!
திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின் தாய், தந்தை ஆன விஜய் டிவியின் ரியல் ஜோடி – வளைகாப்பு போட்டோ வைரல்!

தமிழ் சின்னத்திரையில் 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான ஜோடியாக இருந்தவர்கள், மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஜோடி. இருவரும் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறி இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் 8 ஆண்டுகளுக்கு பின் பெற்றோர்களாக இருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா ஜோடி

விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் பலரது மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல சீசன்கள் வந்தாலும் முதல் சீசன் தான் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினாக நடித்தவர்கள் மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா ஜோடி. இருவரும் சரவணன் மீனாட்சியாக லீட் நடித்த நிலையில் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் விஜய் டிவியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் ஜோடியாக நடித்தனர்.

அதன் பின் சீரியல்களில் இந்த ஜோடியை பார்க்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் மிர்ச்சி செந்தில் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தார். ஸ்ரீஜா சீரியலில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையை பார்க்க தொடங்கினார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆனாலும், விருப்பமான ஜோடிகளின் வரிசையில் இவர்கள் இன்னும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளனர்.

அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பிரபல நிறுவனம் – ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

Exams Daily Mobile App Download

அதாவது அவர்களின் 8 வருட காதல் வாழ்க்கைக்கு அர்த்தமாக இருவரும் பெற்றோர்களாக இருப்பதாக, வளைகாப்பு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை கமெண்ட் மூலமாக தெரிவித்து வருகின்றனர். 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இறக்கின்றனர். மிர்ச்சி செந்தில், தொலைக்காட்சி தொடர் மட்டுமின்றி, தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!