சந்தியாவை காப்பாற்றும் சரவணன், போட்டியில் கலந்து கொள்ள சொல்லும் சிவகாமி – “ராஜா ராணி 2” எபிசோட்!

0
சந்தியாவை காப்பாற்றும் சரவணன், போட்டியில் கலந்து கொள்ள சொல்லும் சிவகாமி -
சந்தியாவை காப்பாற்றும் சரவணன், போட்டியில் கலந்து கொள்ள சொல்லும் சிவகாமி - "ராஜா ராணி 2" எபிசோட்!
சந்தியாவை காப்பாற்றும் சரவணன், போட்டியில் கலந்து கொள்ள சொல்லும் சிவகாமி – “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சரவணனை தைரியப்படுத்த சந்தியா திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதனால் சரவணன் கையை மறந்து எழுந்து சந்தியாவை காப்பாற்றுகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சரவணன் கையை நினைத்து சோகமாக இருக்க, சந்தியா எவ்வளவோ பேசியும் சரவணன் தைரியமாக இருக்கவில்லை. அதனால் சந்தியா திட்டமிட்டு நீச்சல் குளத்தில் விழுந்து விடுகிறார். அவர் தண்ணியில் மூச்சு திணறி இருக்க, சரவணன் என்ன செய்வது என தெரியாமல் தண்ணீரில் குதித்து சந்தியாவை காப்பாற்றுகிறார். அப்போது அவரது கை சரியாகிவிட அதை அவர் கவனிக்காமல் சந்தியாவிற்கு எதாவது பிரச்சனை இருக்கிறதா என பார்க்கிறார்.

பின் சரவணன் கை சரியானதை பார்த்து சந்தோசமாக இருக்க, சந்தியாவும் இது தான் உங்க தைரியம். உங்களுக்கு மனவலிமையை விட உடல் வலிமை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இப்படி ஒரே நாளில் மருத்துவத்தை மீறி கை சரியாகி இருக்கிறது. அதே போல நீங்க இந்த போட்டியில் எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி அடைவீர்கள் என சொல்கிறார். ஆமாம் எனக்கும் ஒரு உறுதி வந்திருக்கு என சொல்கிறார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து என்ன நடந்தது என தெரியாமல் இருக்க, சரவணன் கை சரியானதை பார்த்து சந்தோசப்படுகிறார்கள்.

மாநில அரசு ஊழியர்களுக்கு DA 31% ஆக உயர்வு, ஜூலை 2021 முதல் அமல் – உத்தரவு பிறப்பிப்பு!

கை எப்படி சரியானது என கேட்க நடந்தது எல்லாத்தையும் சரவணன் சொல்கிறார். என் பையன் இவ்வளவு தைரியமாக இருப்பதை நினைத்து சந்தோசப்பட அர்ச்சனா போட்டி எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். சிவகாமி என் புள்ள கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என சொல்ல, சரவணன் எனக்கும் போட்டியில் வெற்றி தோல்வியை எதிர் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கிறது என சொல்கிறார். பின் அர்ச்சனா நீங்க என்ன கலந்து கொண்டாலும் நான் உங்களை வெற்றி பெற விடமாட்டேன் என நினைத்து கொள்கிறார்.

இரவு சரவணன் எதோ வாங்கி கொண்டு வந்து அனைவரையும் வர சொல்கிறார். இது என்ன என எல்லாரும் கேட்க சொல்கிறேன் என சொல்கிறார். இது கேக் என்பதை சந்தியா கண்டுபிடிக்க யாருக்கு இன்று பிறந்தநாள் என கேட்கிறார். பிறந்தநாள் இல்லை கல்யாண நாள் என சொல்ல, அத்தை மாமாவிற்கா என கேட்கிறார். ஆமாம் இப்போது தான் பாட்டி சொன்னார் என சொல்ல, சரவணன் உள்ளே சென்று சிவகாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். அதை பார்த்து சிவகாமி சந்தோசப்பட, சரவணன் தென்காசியில் இருக்கும் கடையை மேலே உயர்த்த வேண்டும் அது தான் என்னுடைய ஆசை என சுந்தரம் சொல்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் – ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? சட்டப்பேரவையில் அறிவிப்பு?

சரவணன் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்ள இருப்பதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். சந்தியா சரவணன் அம்மாவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க அனைவரும் சரவணன் மீண்டு வந்ததை பாராட்டினார்கள். அடுத்த போட்டி என்ன இருக்கும் என கேட்க, அடுத்த போட்டி எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது என மற்ற போட்டியாளர் சொல்கிறார். எந்த போட்டியாக இருந்தால் என்ன பார்த்துக் கொள்வோம் என சொல்கிறார். இந்த தைரியம் எல்லாம் போதும் நீங்க கட்டாயம் போட்டியில் வெற்றி பெறுவீங்க என சொல்கிறார். எப்படியும் அண்ணன் தோற்க தான் போறாரு எதற்கு இந்த வேலை என ஆதி சொல்ல, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என அர்ச்சனை சொல்கிறார். பின் சல்மாவிடம் அர்ச்சனா அடுத்து எதாவது செய்ய வேண்டும் சரவணன் இந்த போட்டியில் தோற்க வேண்டும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது .

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!