மூர்த்தியிடம் குடித்து விட்டு தகராறு செய்யும் ஜீவா, குழந்தைக்காக கோவிலுக்கு செல்லும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் திருப்பங்கள்!

0
மூர்த்தியிடம் குடித்து விட்டு தகராறு செய்யும் ஜீவா, குழந்தைக்காக கோவிலுக்கு செல்லும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் திருப்பங்கள்!
மூர்த்தியிடம் குடித்து விட்டு தகராறு செய்யும் ஜீவா, குழந்தைக்காக கோவிலுக்கு செல்லும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் திருப்பங்கள்!
மூர்த்தியிடம் குடித்து விட்டு தகராறு செய்யும் ஜீவா, குழந்தைக்காக கோவிலுக்கு செல்லும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் திருப்பங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்போதும் ஒற்றுமை தான் பிரதானமாக இருக்கும் நிலையில், தற்போது குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு இடையில் தகராறு வந்துள்ளது. இதனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக கதையில் மாற்றகள் வர உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த குடும்பத்தில் மூத்த அண்ணன் மூர்த்தி தான் ஒரு அப்பா இடத்தில் இருந்து தன் தம்பிகளை வளர்த்து வந்தார். இன்று அவர்கள் வளர்ந்து தங்களுக்கு என்று தனித்தனியாக அடையாளத்தை தேடாமல் ஒன்றாக ஒரே குடும்பமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு ஒரு புதிய சோதனை வந்துள்ளது.

மதுரையில் நாளை (ஏப்ரல் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மீனாவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஜீவா தான் அவரின் கடையை பார்த்துக் கொள்கிறார். ஆனாலும் மூர்த்தி வாக்கு கொடுத்த காரணத்தினால் மட்டுமே ஜீவா அங்கு கடையை பார்த்துக் கொள்கிறார். மனம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றியே சிந்தனை ஜீவாவிற்கு ஓடுகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகிறார். ஆனால் ஜனார்த்தனன் ஏற்கனவே மூர்த்தியிடம் மாப்பிளை எப்போதும் உங்க கடை பற்றியே யோசிக்கிறார் என்று குறை சொன்னதால், மூர்த்தி ஜீவாவை மாமா கடைக்கு போகச் சொல்கிறார்.

இதனால் ஜீவா மனம் ஒடிந்து போகிறார். இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் குடித்து விட்டு வந்து வீட்டில் மூர்த்தியிடம் தகராறு செய்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இன்னொரு புறம் முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள அம்மன் கோயில் ஒன்றை பற்றி கஸ்தூரி சொல்கிறார். இதனால் முல்லை அங்கு போகலாம் என்று தயாராகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here