விஜய் டிவி பிரியங்காவுக்கா இந்த நிலைமை? கணவர் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் – ஆறுதலே அந்த குழந்தை தான்!

0
விஜய் டிவி பிரியங்காவுக்கா இந்த நிலைமை? கணவர் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் - ஆறுதலே அந்த குழந்தை தான்!
விஜய் டிவி பிரியங்காவுக்கா இந்த நிலைமை? கணவர் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் – ஆறுதலே அந்த குழந்தை தான்!

விஜய் டிவியின் ஸ்டார் தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி பிரபலம்:

கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக விஜய் டிவியின் ஒல்லி பெல்லி நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராக அறிமுகமாகியவர் பிரியங்கா. இவர் அடுத்தடுத்து பல முன்னணி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக கலந்து கொண்டு பிரபலமானார். மிகவும் கலகலப்பாகவும் விளையாட்டுத்தனமாகவும் பேசும் பிரியங்காவின் நிகழ்ச்சிக்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் விஜய் டிவியை சேர்ந்த பிரவீன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Follow our Instagram for more Latest Updates

ஆரம்ப காலத்தில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தனது கணவரைப் பற்றி பிரியங்கா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் குறிப்பிடவில்லை. குறிப்பாக பிக் பாஸ் சீசன் 5 இல் பிரியங்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது கூட தனது அம்மா, தம்பி மற்றும் தம்பியின் மனைவியை பற்றி கூறிய பிரியங்கா தனது கணவரை பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகான பேட்டிகளிலும் தனது கணவர் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பிரியங்கா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கர்ப்பமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – லேட்டஸ்ட் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பிரியங்காவின் தம்பிக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிரியங்கா அந்த குழந்தையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி இணைய தளத்தில் பதிவிட்டு வருவார். தீபாவளி தினமான நேற்று தம்பி மகளுடன் எடுத்துள்ள வீடியோவை பிரியங்கா பதிவிட்டுள்ளார். அதில், MY DIWALI என்று குறிப்பிட்டிருந்தார். கணவரை பிரிந்து வாழும் பிரியங்காவிற்கு அந்த குழந்தை மட்டும் தான் தற்போது ஆறுதலாக உள்ளது போல என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!