அதிரடியாக நேர மாற்றம் செய்யப்படும் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
அதிரடியாக நேர மாற்றம் செய்யப்படும் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதிரடியாக நேர மாற்றம் செய்யப்படும் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதிரடியாக நேர மாற்றம் செய்யப்படும் விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வருகிற அக் 9 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், ராஜா ராணி 2 மற்றும் ஈரமான ரோஜாவே 2 சீரியல்களின் நேரம், மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சீரியல்கள் நேர மாற்றம்

தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக கடந்த மாதம் ப்ரோமோ வெளியானது. இந்த சீசனிலும் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் ஆறாவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்களும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 வருகிற அக். 9 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியானது. அதன் பின் கடந்த ஆண்டு போல பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான அறிவிப்பின் படி இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் ராஜா ராணி 2 மற்றும் ஈரமான ரோஜாவே 2 சீரியல்களில் நேர மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஜத்திலும், சீரியலிலும் அப்பாவான பிரபல சீரியல் நடிகர் – ரசிகர்கள் வாழ்த்து!

Exams Daily Mobile App Download

சிப்பிக்குள் முத்து சீரியல் முடிய இருக்கும் நிலையில், அந்த நேரத்தில் ராஜா ராணி 2 சீரியல் மாற்றப்படுமா அல்லது பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்த 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அனைத்து சீரியலும் நல்ல ரீச்சில் இருப்பதால் நேர மாற்றம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!