விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் விசேஷம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் விசேஷம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் விசேஷம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா வீட்டில் “குவா குவா சத்தம் கேட்டுருச்சு” இதுக் குறித்த தகவலை அவரே புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

வைரலாகும் புகைப்படம்:

சின்னத்திரை டாப் ஆங்கர் லிஸ்டில் இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் பிரியங்கா. இவர் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். முதன் முதலாக 10 வருடங்களுக்கு முன்னதாக ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் விஜய் டிவிக்கு நுழைந்தார். அடுத்தடுத்து முக்கியமான நிகழ்ச்சிகளை ஆங்கரிங் செய்வதர் சூப்பர் சிங்கர் ஷோவை கையில் எடுத்த பின்பு விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரன்னர் அப் இடத்தை பிடித்தாலும் அவர் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார்.

Exams Daily Mobile App Download

மேலும் பிரியங்கா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா தன்னுடைய மிகப் பெரிய பலமாக அடிக்கடி கூறுவது ரசிகர்கள் அதன்பின்பு அவரின் அம்மா மற்றும் தம்பியை தான். கடந்த 2020ஆம் ஆண்டு லாக்டவுனில் தம்பியின் திருமணத்தை யூடியூப்பில் லைவாக வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து இருந்தார். பிக் பாஸ் வீட்டுக்கு ஒரு முறை அவரது தம்பியும் வந்து இருந்தார். இந்நிலையில், தற்போது பிரியங்கா தம்பியின் மனைவி கர்ப்பமாக இருந்தார். அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

தனது கணவரை விவாகரத்து செய்த தொகுப்பாளினி பிரியங்கா – அதிர்ந்து போன ரசிகர்கள்!

அந்த பதிவில் தனது தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ‘ ஆண்டி கிட்ட வா மா ‘ என்று குழந்தை குறித்து அழகாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிரியங்காவின் தம்பிக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாகவும் , அந்த குழந்தைக்கு ‘நிகா’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தையும் பிரியங்கா ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!