ஜீவாவை மீண்டும் குடிக்க வைக்கும் கைலாஷ், முல்லையை பரிகாரத்திற்கு கோயிலுக்கு அழைக்கும் கஸ்தூரி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நிகழ்வுகள்!

0
ஜீவாவை மீண்டும் குடிக்க வைக்கும் கைலாஷ், முல்லையை பரிகாரத்திற்கு கோயிலுக்கு அழைக்கும் கஸ்தூரி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நிகழ்வுகள்!
ஜீவாவை மீண்டும் குடிக்க வைக்கும் கைலாஷ், முல்லையை பரிகாரத்திற்கு கோயிலுக்கு அழைக்கும் கஸ்தூரி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நிகழ்வுகள்!
ஜீவாவை மீண்டும் குடிக்க வைக்கும் கைலாஷ், முல்லையை பரிகாரத்திற்கு கோயிலுக்கு அழைக்கும் கஸ்தூரி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நிகழ்வுகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில நாட்களாக அண்ணன், தம்பிகளுக்குள் இடையில் சில மனவருத்தங்கள் வருவது போல் காட்சிகள் வருகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிந்து விடுமோ என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இன்றைய நிகழ்வுகள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை வருடங்களாக அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக இருப்பது போன்று கட்டுவது தான் இந்த தொடரின் சிறப்பு. தற்போதைய வாழ்கை முறையில் கூட்டுக் குடும்பம் என்பது திரையில் மட்டுமே பார்க்கும் அரிய விஷயமாகி விட்டது. இதனால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரேட்டிங்கில் எப்போதும் நிலையான இடத்தை பிடித்துள்ளது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் தான் ஹாட் டாபிக் ஆக கதையில் சமீபகாலமாக சென்று வருகிறது. இந்நிலையில் கஸ்தூரி இதற்காக கோயில் ஒன்றை முன்னதாகவே சொல்லி இருந்தார்.

கண்ணம்மாவிடம் விவாகரத்து விஷயத்தை பற்றி கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்!

இன்றைய எபிசோடில் முல்லையை பார்க்க அவரது அம்மா மற்றும் கஸ்தூரி இருவரும் வருகின்றனர். அப்போது பாண்டியனுக்கு உடம்பில் ஏதோ புள்ளி புள்ளியாக இருப்பதாக தனம் கூறுகிறார். பின்னர் அவர்களுக்கு மோர் கொண்டு வர செல்கிறார். இதற்கிடையில் கஸ்தூரி மீண்டும் முல்லையை புதுக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று வருவோம் என்று அழைக்கிறார். முல்லையும் இதை பற்றியே யோசித்து வருகிறார். பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் கடைக்கு ஜீவா வர அங்கு வேலை பார்ப்பதாக சொல்கிறார். ஆனால் மூர்த்தி ஜனார்தனனிற்கு கொடுத்த வாக்கை நினைவில் வைத்து, நாங்க எல்லாரும் இந்த கடையை பார்த்துக் கொள்கிறோம். நீ உன் மாமா கடையை பார்த்துக் கொள் என்று கூறுகிறார்.

விஜய் டிவி ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம் – வைரலாகும் வீடியோ!

மூர்த்தி கோவமாக சொல்வதாக ஜீவா நினைத்துக் கொள்கிறார். ஆனால் மூர்த்தி சாதாரணமாக தான் சொல்கிறார். மீனாவின் அம்மா வீட்டில் கைலாஷ் இரவில் மீண்டும் ஜீவாவை குடிக்க வைக்கிறார். இதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா சங்கட படுகின்றனர். பின்னர் ஜீவா மீனா அப்பாவிடம் தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி விடுகிறார். தனது குடும்பத்தின் இருந்து தான் தனியாக வந்து விட்டதாக கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here