வீட்டை விற்க மனம் இல்லாமல் இருக்கும் மூர்த்தி, கஸ்டமரை கவர கதிர் செய்யும் புது ஸ்டைல் – இன்றைய எபிசோட்!

0
வீட்டை விற்க மனம் இல்லாமல் இருக்கும் மூர்த்தி, கஸ்டமரை கவர கதிர் செய்யும் புது ஸ்டைல் - இன்றைய எபிசோட்!
வீட்டை விற்க மனம் இல்லாமல் இருக்கும் மூர்த்தி, கஸ்டமரை கவர கதிர் செய்யும் புது ஸ்டைல் - இன்றைய எபிசோட்!
வீட்டை விற்க மனம் இல்லாமல் இருக்கும் மூர்த்தி, கஸ்டமரை கவர கதிர் செய்யும் புது ஸ்டைல் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டை விற்க பேச ஆனால் வீட்டை வாங்குபவர் வீட்டை இடித்துவிட்டு கட்டுவேன் என சொல்கிறார். அதனால் மூர்த்திக்கு சரியாக தோன்றவில்லை. மறுபக்கம் கதிர் தனி திறமையால் கடைக்கு வரும் கஸ்டமரை கவர்ந்துவிடுகிறார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி வீட்டை விற்க முடிவு செய்த நிலையில் புதிதாக ஆள் ஒருவர் வருகிறார். அவர் 65 லட்சம் கொடுப்பதாக சொல்ல ஜீவா சரி தான் என சொல்கிறார். அண்ணாச்சி மூர்த்தியை நன்றாக யோசித்து கொள்ள சொல்ல, எனக்கு இடம் தான் முக்கியம் நீங்க சொன்னால் ஒரே நாளில் பணம் கொடுத்துவிட்டு வேலையை தொடங்கிவிடுவேன் என அந்த ஆள் சொல்கிறார். பின் மூர்த்தி எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் வீட்டை கொடுத்துவிட்டு நாங்க எல்லாரும் இருக்க புது வீடு வாங்கும் வரை 3 மாதம் தங்கி கொள்ள வேண்டும் என மூர்த்தி கேட்கிறார். ஆனால் அந்த ஆள் பணம் அதிகம் அதனால் உடனே எனக்கு வேலையை தொடங்கினால் தான் சரியாக வரும் என சொல்கிறார்

மூன்று மாதம் தங்கி இருந்தால் வட்டி என்ன ஆகும் என அவர் கேட்க, ஒன்றும் பிரச்சனை இல்லை உடனே நீங்க இருக்க வாடகை வீட்டை பாருங்கள் என அவர் சொல்கிறார். ஆனால் மூர்த்திக்கு அது சரியாக வரும் என தோன்றவில்லை. சொந்த வீட்டை விட்டுவிட்டு பொருள்களுடன் வாடகை வீட்டில் இருக்க முடியாது என மூர்த்தி சொல்ல யோசித்து சொல்லுங்க என அந்த ஆள் கிளம்புகிறார். மூர்த்தி ஜீவாவிடம் நான் சொல்வது சரி தான என கேட்க சரி தான் என ஜீவா சொல்கிறார். மறுபக்கம் கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்க புரோட்டாவை தூக்கி போட்டு பழகலாம் என முல்லை சொல்கிறார் . உடனே கதிர் புரோட்டாவை தூக்கி போட முல்லை அதை பிடிக்கிறார்.

அதை எல்லாம் பார்த்து பார்வதிக்கு கோவம் வருகிறது 4 நாட்களாக வியாபாரம் இல்லை ஆனால் நீங்க இப்படி விளையாடி கொண்டிருக்கீங்க என பார்வதி கேட்கிறார். இப்படி இருந்தால் எப்படி உறுப்புட என பார்வதி எரிச்சல்படுகிறார். பின் முல்லை கதிரும் அமைதியாக இருக்கின்றனர். பின் ஐஸ்வர்யா இன்று காசு வந்ததாக சொல்ல மீனா கடை திறக்க வந்தவர்களுக்கு மேக்கப் போட்டால் காசு கிடைக்க தான் செய்யும் என சொல்கிறார். அப்போது மீனாவின் அப்பா அம்மா வருகின்றனர். ஐஸ்வர்யா பார்லர் திறக்க இருப்பதாக சொன்னாய் அதான் பார்த்துவிட்டு போக வந்ததாக மீனாவின் அப்பா சொல்கிறார்.

ஐஸ்வர்யாவின் தோழி பொருள்களை எல்லாம் இலவசமாக கொடுத்தாள் அதனால் தான் வீட்டில் சும்மா இருக்காமல் பார்லர் திறந்ததாக சொல்ல நல்ல விஷயம் என மீனாவின் அம்மா சொல்கிறார். பின் ஐஸ்வர்யா மீனாவின் அம்மாவிற்கு மேக்கப் போடுகிறார். தனம் வீட்டை விற்பதை பற்றி மீனாவின் அப்பாவிடம் சொல்கிறார். புது வீடு வாங்க பணம் இல்லை என சொல்ல, மீனாவின் அப்பா இது நல்ல இடம் இந்த வீட்டை கொடுத்துவிட்டால் மீண்டும் வாங்க முடியாது என சொல்கிறார். மீனா ஜீவா தலையில் ஓடு விழ இருந்தது பற்றி சொல்கிறார். மீனாவின் அப்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். தனம் அதனால் தான் வீட்டை மாற்ற முடிவு செய்ததாக சொல்கிறார்.

கரண்ட் பில்லை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பம், சண்டையிடும் எழில் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் கதிர் கடைக்கு கஸ்டமர் வருகின்றனர். அவர்கள் அசைவம் இருக்கிறதா என கேட்க இது சைவ ஹோட்டல் என சொல்கிறார். அவர்கள் சரி என சொல்ல, கதிர் செம ஸ்டைலாக புரோட்டா போடுகிறார். அதை மல்லி பார்த்து கடுப்பாக வருகிற கஸ்டமர் ஒருவர் அதனை வீடியோவாக எடுக்கிறார். கதிர் புரோட்டா போடும் அழகை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். மல்லி கதிர் புரோட்டாவை தூக்கி போடுவதை வித்தியாசமாக பார்க்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here