விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் - வைரல் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் - வைரல் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தான் பொங்கல் கொண்டாட்டம் முடிந்துள்ள நிலையில், அதன் நடிகர்கள் அனைவரும் வரிசையாக தங்கள் பொங்கல் கொண்டாட்டத்தை பதிவாக வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகை சுஜிதா தன் யூடியூப் பக்கத்தில் வீடீயோவை வெளியிட்டு உள்ளார்.

நடிகை சுஜிதா:

பொதுவாக சீரியல்களில் அந்தந்த சமயங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளை வைத்து ஒரு சில எபிசோடுகளை எடுப்பார்கள். அவை மிகவும் கலாட்டா நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் காட்டப்படும். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் பொங்கல் கொண்டாட்டம் தொடர்பான காட்சிகள் வந்தது. அவை வழக்கத்தை மீறி அதிக கலகலப்பாக சென்றது. இதனை தொடர்ந்து பல நடிகர்களும் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதை வெளியிட்டு வந்தனர்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய அஞ்சலி ஸ்வீட்டி? ரசிகர்கள் அதிர்ச்சி!

அதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம் வேடத்தில் நடிக்கும் நடிகை சுஜிதா தனது யூடுயூப் சேனலில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் தான் பொங்கல் பண்டிகை என்பதால் கிராமத்து பெண் போல் தயாராகி பொங்கல் வைக்க இருப்பதாக கூறியுள்ளார். தனது மகனுக்கு வேட்டி, சட்டை அணிவித்து இருந்தார். அந்த வீடியோவில் தனக்கு திருமணம் ஆன புதிதில் வந்த தல பொங்கல் மற்றும் சமீபத்தில் வந்த பொங்கல் இரண்டின் கொண்டாட்ட வீடியோக்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்.

“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கிய தனுஷ் பட நடிகை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அதை பார்க்கும் போது தனக்கே பல விஷயங்கள் மறந்து விட்டதாகவும், பழைய வீடியோக்களை பார்க்கும் போது தான் தனக்கே அவை நினைவுக்கு வருவதாகவும் சுஜிதா கூறியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். பொங்கல் வைத்த பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்து சிறு சிறு விளையாட்டுகளையும் நடத்தினார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்குகளை அளித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!