
பிரசாந்தால் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வரும் ஜனார்த்தனன்.. ஆதரவு தரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – வெளியான அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், எல்லா பிரச்சனைகளும் முடிந்து மீண்டும் குடும்பம் சேர்ந்துள்ள நிலையில், ஜீவா பேச்சை கேட்காமல் ஜனார்த்தனன் பிசினஸ் நடத்த அதில் பயங்கர நஷ்டம் ஏற்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இதுவரை இருந்த எல்லா பிரச்சனைகளும் முடிந்து, மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக வாழ தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் எல்லாரும் பாசமாக இருக்க, இப்போது வரை ஜனார்த்தனன் மட்டும் திருந்தாமல் இருக்கிறார். அவர் ஜீவா சொன்னதை கேட்காமல் பிரசாந்த் பேச்சை கேட்டு பிசினஸ் ஒன்று தொடங்க இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அது ஏமாற்று வேலை என சொல்லியும் கூட ஜனார்த்தனன் கேட்கவில்லை. இந்நிலையில் ஜீவா சொன்னது போலவே ஜனார்த்தனன் ஏமாந்து போகிறார். அவருடைய பணம் சொத்து எல்லாம் நஷ்டமாகிவிட, மாப்பிள்ளை சொன்னது சரி என ஜனார்த்தனன் புரிந்து கொள்கிறார்.
மதுரையில் இன்று மதுபான கடைகள் இயங்காது – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அவர் நடுத் தெருவிற்கு வர, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவருக்கு ஆதரவு தருமா என்பது தான் பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.