
கயல் வாழ்க்கையில் முடிவு எடுக்கும் ஜனார்த்தனன்.. கோவத்தின் உச்சியில் ஜீவா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா & மீனா வாழ்க்கையில் ஜனார்த்தனன் எல்லா முடிவுகளையும் எடுக்க, ஜீவா கடும் கோபத்தில் இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜீவா & மீனா குடும்பத்தை விட்டு பிரிந்து ஜனார்த்தனன் வீட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் ஜனார்த்தனன் தொழிலை ஜீவா பார்த்துக் கொண்டாலும், அனைத்து முடிவுகளையும் ஜனார்த்தனன் தான் எடுக்கிறார். அவருடைய தொழில் தானே என ஜீவா அமைதியாக இருக்க, ஜனார்த்தனன் ஒரு படி மேலே சென்று கயல் வாழ்க்கையில் தலையிடுகிறார். அதாவது கயலை திருச்சி ஸ்கூலில் சேர்க்க போவதாக சொல்ல, அதை கேட்டு மீனா & ஜீவா அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போ நாங்க என்ன செய்வது என மீனா கேட்க, உங்களையும் அங்கே செட்டில் செய்ய இருப்பதாக ஜனார்தனன் சொல்கிறார். உடனே கோவப்பட்ட ஜீவா நான் கயலுக்கு அப்பாவாக இருக்க வேண்டும் என சொல்கிறார். இப்படியே எல்லா விஷயங்களும் நடக்க, ஜீவா தன்னுடைய பொறுமையை இழந்து மீண்டும் மூர்த்தியுடன் சேர போகிறார். ஆனால் எல்லாம் பேசிவிட்டு ஜீவா இப்போது வர அவரை ஏற்றுக் கொள்ளாமல் யோசிக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.