மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மீனாவின் அப்பா, ஹோட்டல் நஷ்டத்தால் கிண்டல் செய்யும் மல்லி – இன்றைய எபிசோட்!

0
மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மீனாவின் அப்பா, ஹோட்டல் நஷ்டத்தால் கிண்டல் செய்யும் மல்லி - இன்றைய எபிசோட்!
மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மீனாவின் அப்பா, ஹோட்டல் நஷ்டத்தால் கிண்டல் செய்யும் மல்லி - இன்றைய எபிசோட்!
மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மீனாவின் அப்பா, ஹோட்டல் நஷ்டத்தால் கிண்டல் செய்யும் மல்லி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி வீட்டை விற்க முடிவு செய்த நிலையில் மீனாவின் அப்பா அதை வாங்க நினைக்கிறார். மறுபக்கம் கதிர் ஹோட்டலில் நஷ்டத்தை சந்திக்க மல்லி அதை பார்த்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடையில் புரோட்டா போட அவருடைய புது ஸ்டைலை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர். கடையில் வந்த கஸ்டமர் ஒருவர் கதிர் ஸ்டைலாக புரோட்டா போடுவதை பார்த்து தனது செல்போனில் படம் எடுக்கிறார். பின் மல்லி வீடியோ எடுக்க வேண்டாம் என முல்லையின் அப்பாவிடம் சொல்ல சொல்கிறார். முல்லை அப்பா அந்த கஸ்டமரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என சொல்கிறார். உடனே மல்லி வியாபாரம் இல்லை என்றாலும் இவர்கள் வித்தை காட்டுவது எனக்கு பிடிக்கவில்லை என சொல்கிறார்.

பின் மீனாவின் அப்பா அம்மா காரில் சென்று கொண்டிருக்கும் போது மீனாவின் அம்மா என்ன யோசிக்கிறீர்கள் என கேட்கிறார். அப்போது மீனாவின் அப்பா அவர்கள் வீட்டை விற்க போறாங்களாம் ஏன் அந்த வீட்டை நாம வாங்க கூடாது என கேட்க அது பழைய வீடாம் அது எதற்கு நமக்கு என கேட்க, மீனாவின் அப்பா அந்த வீடு மெயின் இடத்தில் இருக்கிறது பிற்காலத்தில் நல்ல விலைக்கு போகும் என சொல்கிறார். பின் மீனாவின் அம்மா சொந்தக்காரர்களிடம் இது எல்லாம் சரியாக வராது என சொல்ல, மீனாவின் அப்பா என்ன பேசுகிறாய் அந்த வீட்டை வாங்கி நாம என்ன செய்ய போகிறோம் பிற்காலத்தில் மாப்பிள்ளையிடம் தான் போக போகிறது என சொல்கிறார்.

மறுபக்கம் வீட்டை பார்க்க ஜீவா புது ஆள் ஒருவரை கூட்டிக் கொண்டு வருகிறார். ஜீவாவிடம் இந்த வீட்டை கட்டி எத்தனை வருடம் ஆகிறது என கேட்க 40 வருடம் ஆகிறது என சொல்கிறார். இந்த வீடு எத்தனை பேர் பெயரில் இருக்கிறது என வீட்டை பார்க்க வந்தவர் கேட்க, 4 பேர் என சொல்கிறார். அதில் ஒரு தம்பி கோவித்து கொண்டு வெளியே சென்றுவிட்டதாக சொல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை என ஜீவா சொல்கிறார். பின் ரூமிற்கு சென்று பார்க்க அங்கே மீனா கயலுக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறார். யார் இது என மீனா கேட்க வீட்டை பார்க்க வந்திருப்பதாக ஜீவா சொல்கிறார்.

பின் வீடு மிகவும் பழையதாக இருப்பதாக சொல்ல, அந்த கஸ்டமர் எவ்வளவு விலை வேண்டும் என கேட்கிறார். தனம் ஒரு 70 லட்சம் வேண்டும் என சொல்ல, அவ்வளவு கொடுக்க முடியாது என கஸ்டமர் சொல்கிறார் ஒரு 55 லட்சத்திற்கு கொடுக்கலாம் என சொல்ல தனம் பேசிவிட்டு சொல்வதாக சொல்கிறார். பின் மீனா வந்து வீட்டை பார்க்க ரூம் வரை கூட்டிக் கொண்டு வராதே என சொல்கிறார். தனம் இனிமேல் பணத்தை சொல்லிவிட்டு ஆட்களை அழைத்து கொண்டு வா என சொல்கிறார்.

இன்று நாடு முழுவதும் 46 பேருக்கு நல்லாசிரியர் விருது – குடியரசுத்தலைவர் வழங்கல்!

கதிர் முல்லை வியாபாரத்தை முடித்துவிட்டு கிளம்ப மல்லி கணக்கு பார்த்துவிட்டு கிளம்ப சொல்கிறார். எனக்கு முடியாமல் இருக்கிறது என சொல்ல நாளைக்கு லாபம் வந்ததாக சொல்வாய் என சொல்கிறார். பின் முல்லை வேலை செய்தால் தான் கஷ்டம் இருக்கும் என முல்லை சொல்ல, மல்லி நான் எதற்கு வேலை செய்ய வேண்டும் என கேட்கிறார். பின் கதிர் அவங்க எதற்கு வேலை செய்ய வேண்டும் நாம கிளம்பலாம் என சொல்ல மல்லி கணக்கு பார்க்க வேண்டும் என சொல்கிறார். இன்னும் 30 நாள் ஆகவில்லை ஆனாலும் அவர் தான சவால் விட்டார் என மல்லி கேட்க முல்லை கணக்கு பார்க்க தொடங்குகிறார். அப்போது நஷ்டம் கம்மியாக வந்துள்ளதாக கதிர் சந்தோசப்பட மல்லி அதை நக்கலடித்து சிரிக்கிறார்.

இருவரும் ஒழுங்காக வியாபாரம் செய்யாமல் குரங்கு வித்தை காட்டினீர்கள் உங்களுக்கு இந்த வேலை சரியாக வராது ஒழுங்காக மல்லி சொன்னது போல மதுரைக்கு சென்று வேலை பார்த்து சம்பளம் வாங்குங்கள் என சொல்ல, முல்லை அம்மா இந்த ஹோட்டல் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கதிர் இல்லை நாளைக்கு நன்றாக வியாபாரம் நடக்கும் என சொல்கிறார். உங்க சாப்பாடு நன்றாக இருக்கிறது ஆனால் வியாபாரம் ஆகவில்லை என மல்லி சொல்ல, கதிர் அதெல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கையுடன் இருக்கிறார். பின் மூர்த்தி இன்னைக்கு வீட்டை பார்த்துவிட்டு போனவர்கள் எல்லாரும் சரியாக வராது என சொல்ல, தனம் ஆமாம் சரியாக வராது என சொல்ல, ஐஸ்வர்யா நான் அவர்கள் வருவதால் பொருள்களை எடுத்து வைத்தேன் எல்லாம் உடைந்துவிட்டதாக சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here