
வேலை ஆட்களை பார்த்து கடுப்பான தனம், மூர்த்திக்கு வந்த புது சிக்கல் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் வீட்டு வேலைகளை பார்க்க ஆட்களை அழைத்து வருகிறார். பின் அந்த ஆட்கள் வேலை செய்வது தனத்திற்கு பிடிக்காமல் இருக்கிறது. மறுபக்கம் மூர்த்தி இடம் வாங்குபவர் உடனே பணம் நிறைய வேண்டும் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் வீட்டில் வேலை பார்க்க ஆட்களை கூட்டி கொண்டு வருகிறார். வேலைக்கு ஆள் கிடைப்பதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் உடனே அழைத்து கொண்டு வந்தேன் என சொல்ல, அவர் சொல்லாமல் எல்லாம் செய்வது மூர்த்திக்கும் ஜீவாவிற்கும் பிடிக்கவில்லை. பின் மீனா வீடு இப்படி இருப்பதால் தான் அப்பாவாக ஆட்களை அழைத்து கொண்டு வந்திருக்கிறார். ஆனால் இவங்களுக்கு இது கூட பிடிக்காமல் இருக்கிறது என நினைத்து கொள்கிறார். பின் ஜனார்த்தனன் மீனாவிடம் என்ன வேலை இருந்தாலும் இவர்களை பார்க்க சொல்லு என சொல்கிறார்.
மறுபக்கம் கதிரை டிவி சேனலில் இருந்து பேட்டி எடுத்துக் கொண்டு சென்றது எப்போது என கேட்கிறார். உடனே முல்லை போன் செய்து கேட்க, சாயங்காலம் வரும் என சொல்கின்றனர். கதிர் முல்லை அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் கோபி கடையில் ஜீவாவிடம் வேலைக்கு ஆட்கள் வந்தார்களே சென்றுவிட்டார்களா என கேட்க, ஜீவா இல்லை என சொல்கிறார். அப்போது வீட்டில் ஆள் இல்லாத போது இப்படி வரலாமா என கேட்க, ஜீவா அவர் எதுவும் சொல்லவில்லை என சொல்கிறார். அப்போது அண்ணாச்சி வந்து என்னாச்சு என கேட்க, ஜீவா நடந்ததை சொல்கிறார். வீட்டை வாங்கிவிட்டால் அது அவருக்கு தான் சொந்தம் அதில் தவறு இல்லை என அண்ணாச்சி சொல்கிறார்.
பின் தனம் என்ன இந்த நேரத்தில் அனுப்பி இருக்கார் என கண்ணனிடம் கேட்க, சொல்லாமல் வந்துவிட்டார் என சொல்கிறார். பின் தனம் மூர்த்திக்கு தோசை ஊற்ற செல்ல, அங்கே வேலை ஆட்கள் வெற்றிலை போட்டு துப்புகிறார். அதை பார்த்து தனம் கோவப்பட, கண்ணன் வேகமாக வேலை செய்ய சொல்கிறார். பின் மூர்த்தி ஜீவா அண்ணாச்சி இடத்தை பார்க்க செல்கிறார். அங்கே ஜீவா வீடு எப்படி கட்ட வேண்டும் என நினைத்து பார்க்கிறார். பின் அண்ணாச்சி வீடு கட்ட ஐடியா ஒன்றை கொடுக்கிறார். மறுபக்கம் கண்ணன் தனம் ஐஸ்வர்யா பேசிக் கொண்டிருக்க, மீனா வேலைகளை முடித்துவிட்டார்களா என கேட்கிறார்.
பின் கண்ணன் முடித்துவிட்டார்கள் என சொல்ல, மீனா வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே பெரியது, நீ ஏன் இப்படி சலித்துக் கொள்கிறாய் என கேட்கிறார். பின் ஐஸ்வர்யா வேலைக்கு வந்தது சரி தான் ஆனால் அடுப்படியில் வேலை செய்ய முடியவில்லை என சொல்ல, ஐஸ்வர்யா மீனாவை ஓனர் அம்மா என கிண்டல் செய்கிறார். பின் இடம் விற்பவர் மூர்த்தியை பார்க்க இடத்திற்கு வர, அவர் வீட்டு பிளான் போட்டாச்சா என கேட்கிறார். பின் அவர் மீதி காசை கேட்க, மூர்த்தி இடம் பதிவு செய்யும் போது தான் கொடுக்க முடியும் என சொல்கிறார். எனக்கு பணம் தேவை இருப்பதாக அவர் சொல்ல, மூர்த்தி சரி என சொல்கிறார். பின் இடம் விற்பவர் கிளம்பி செல்கிறார். அண்ணாச்சி இதெல்லாம் சரியாக வாராது என சொல்ல, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்