தொழிலில் முன்னேறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கும் கதிர், கண்ணனிற்கு வந்த புது சிக்கல் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தொழிலில் முன்னேறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கும் கதிர், கண்ணனிற்கு வந்த புது சிக்கல் - இன்றைய
தொழிலில் முன்னேறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கும் கதிர், கண்ணனிற்கு வந்த புது சிக்கல் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தொழிலில் முன்னேறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கும் கதிர், கண்ணனிற்கு வந்த புது சிக்கல் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் மல்லியிடம் போட்ட சவாலிற்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதை நினைத்து முல்லை வருத்தப்பட ஆனால் கதிர் நம்பிக்கையுடன் இருக்கிறார். மறுபக்கம் கண்ணன் வங்கியில் வேலை அதிகமாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை காலண்டர் பார்த்துக் கொண்டிருக்க கதிர் என்ன இந்த நேரத்தில் காலண்டர் பார்க்கிறாய் என கேட்கிறார். அப்போது முல்லை இன்னும் நாம சொன்ன சவாலிற்கு 4 நாட்கள் தான் இருப்பதாக சொல்ல, இப்போது 10000 ரூபாய் தான் இருக்கிறது. அதையும் செலவு செய்தால் என்ன செய்வது என கேட்கிறார். அப்போது கதிர் அதெல்லாம் சரியாகிவிடும், நாம நேர்மையாக தொழில் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என சொல்கிறார். நாம அண்ணனும் அண்ணிக்கும் எவ்வளவு கஷ்டம் இருக்கும் ஆனால் அவர்கள் நம்மிடம் எதையாவது காட்டி இருக்கிறார்களா என கேட்கிறார்.

அதை கேட்டு முல்லைக்கு தைரியம் வருகிறது. மறுபக்கம் மூர்த்தி ஜீவாவிடம் கடை வேலைகளை பற்றி பேச இடம் விற்பவர் வருகிறார். அவர் எனக்கு பணத்தேவை இருப்பதாக சொல்ல, இப்போது பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுக்கலாமே என சொல்கிறார். உடனே மூர்த்தி சரி என சொல்ல, ஜீவாவை பத்திரத்தை தயார் செய்ய சொல்லிவிட்டு ஒரு 10 லட்சம் கொடுக்கிறார். பின் மீனா அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்கிறார். மறுபக்கம் கண்ணன் வேலையில் மேனேஜர் பயங்கரமாக திட்டுகிறார். கண்ணன் அடுத்து நாம தான் சிக்க போகிறோம் என பயத்தில் நிற்கிறார். அந்த மேனேஜர் கண்ணனை பார்த்து நீ தான் புதிதாக வந்தவனா வேலை செய்யாமல் தப்பிக்கலாம் என நினைக்காதே என சொல்லிவிட்டு, லோன் வசூல் செய்ய அனுப்புகிறார்.

திருமணத்திற்கு சமைக்க வந்த பாக்கியா, கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி ராதிகா – இன்றைய எபிசோட்!

மறுபக்கம் முல்லை கதிர் கடையில் எவ்வளவு சாப்பிட்டாலும் ரூ. 50 என கதிர் எழுதி போடுகிறார். இது எப்படி சரியாக வரும் என முல்லை கேட்க வீணாகி போகாமல் சாப்பிட்டால் நல்லது தான் என சொல்கிறார். பின் கடையில் அந்த போர்டை பார்த்துவிட்டு எல்லாரும் நன்றாக சாப்பிடுகின்றனர். குறைவான விலையில் கிடைப்பதால் எல்லாரும் பயங்கரமாக சாப்பிடுகின்றனர். என்ன ஆகும் என தெரியாமல் முல்லை அப்பா பதட்டத்தில் இருக்க, முல்லையும் என்ன ஆகும் என தெரியாமல் இருக்கிறார். அப்போது மல்லி வந்து பலகையை பார்த்து நக்கலடித்து சிரிக்கிறார். கதிர் மல்லியை அமைதியாக இருக்க சொல்ல, கதிர் போட்ட சவாலிற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கிறது என மல்லி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!