பார்வதியை கண்டபடி திட்டிய கதிர், ஜனார்தனனிற்கு வீட்டை விற்றதை நினைத்து கவலையில் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
பார்வதியை கண்டபடி திட்டிய கதிர், ஜனார்தனனிற்கு வீட்டை விற்றதை நினைத்து கவலையில் மூர்த்தி - இன்றைய
பார்வதியை கண்டபடி திட்டிய கதிர், ஜனார்தனனிற்கு வீட்டை விற்றதை நினைத்து கவலையில் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
பார்வதியை கண்டபடி திட்டிய கதிர், ஜனார்தனனிற்கு வீட்டை விற்றதை நினைத்து கவலையில் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரிடம் கண்ணன் அத்தையை விட்டு ஏன் பணம் கேட்கிறாய் என கேட்க, கதிருக்கு அப்போது தான் உண்மை தெரிய வருகிறது. உடனே முல்லை அம்மாவிடம் என் அண்ணன் தான் முக்கியம் இது தான் கடைசி எச்சரிக்கை என சொல்கிறார்.மறுபக்கம் மூர்த்தி ஜனார்தனனிற்கு வீட்டை கொடுத்தது சரியாக வராது என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரை பார்க்க வந்த கண்ணன் உனக்கு பணம் வேண்டும் என்றால் நேராக அண்ணனை சந்தித்து பேசாமல் ஏன் அத்தையை விட்டு பணம் கேட்கிறாய் என சத்தம் போட, கதிருக்கு அப்போது தான் உண்மை தெரிய வருகிறது. முல்லை கண்ணனிடம் அம்மா வந்தது எங்களுக்கு தெரியாது என சொல்ல கதிர் உங்க அம்மா எங்கே என கேட்கிறார். முல்லை அப்பா இந்த விஷயத்தில் தலையிடாதே என சொன்னால் கேட்கமாட்டேங்கிறாள் அவள் வரட்டும் என சொல்ல, கதிர் நானே அவங்க வந்ததும் கேட்கிறேன் என சொல்கிறார். அப்போது முல்லை அம்மா வர என்னடா கண்ணா வீட்டை முழுவதும் கையெழுத்து போட்டு விற்றுவிட்டீர்கள் போல என கேட்க கதிர் முல்லை அம்மாவிடம் எங்கே போனீங்க என கேட்கிறார்.

அதற்கு முல்லை அம்மா பக்கத்தில் போனதாக சொல்ல, எங்க வீட்டிற்கா என கேட்கிறார். அப்போது முல்லை அம்மா ஆமாம் என சொல்ல, கதிர் எதற்கு போனீங்க என கேட்கிறார். உடனே முல்லை அம்மா எனக்கு உரிமை இல்லையா என கேட்கிறார். உங்களுக்கு யாரு அந்த உரிமை கொடுத்தது என கதிர் கேட்கிறார். நான் கேட்டது போல என் அண்ணனிடம் பணம் கேட்க நீங்க யாரு அவருடைய மனம் எவ்வளவு கஷ்டப்படும், ஏற்கனவே நான் செய்ததை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் நீங்களும் சென்று அவரை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள் என கேட்கிறார். என் அப்பா இல்லாமல் எங்களை வளர்த்தது என் அண்ணன் தான் என சொல்ல, முல்லை அம்மா உங்க நல்லதுக்கு தான் நான் பேசினேன் என சொல்கிறார். என் நல்லதுக்கு பேச நீங்க யார் என கதிர் கேட்கிறார்.

வீட்டை விட்டு வெளியே வந்தாச்சு இனி எதற்கு அங்கே போக வேண்டும் என கேட்க, நாங்க வெளியே எங்கே சுற்றினாலும் இறுதியாக அங்கே தான் போவோம், அது தான் எங்க வீடு,இனிமேல் இப்படி நடந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என கதிர் சொல்ல, பார்வதி மரியாதை இல்லாத இடத்தில் இனிமேல் நான் இருக்கமாட்டேன் என கிளம்புகிறார். பின் மூர்த்தி வீட்டை விற்றதை நினைத்து வருத்தப்பட சாப்பிட வராமல் இருக்கிறார். அப்போது கண்ணன் வந்து கதிர் அண்ணன் கடையில் நடந்தது பற்றி சொல்கிறார். உடனே தனம் எப்படியோ அவங்க மீண்டும் வந்துருவாங்க என சொல்ல, ஐஸ்வர்யா நாங்க வீட்டை விட்டு சென்ற போது எங்களை சேர்த்துக்காமல் இருந்தீங்க, இப்போ ஏன் அவங்களை வர வேண்டும் என நினைக்கிறீர்கள் என கேட்க, தனம் எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார்.

திருமணம் பற்றி கோபியை சந்தித்து பேசும் ராமமூர்த்தி, முடிவில் உறுதியாக இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மறுபக்கம் மீனாவிடம் ஜீவா உன் பெயரில் வீட்டை எழுத இருப்பது தெரியுமா தெரியாதா என கேட்க, உடனே மீனா நான் கோவத்தில் பேசுவேன் ஆனால் எதையும் மனதில் வைத்து கொள்ளமாட்டேன் என சொல்கிறார். ஜீவா அது எப்படி உனக்கு தெரியாது என கேட்க, மீனா சத்தியமாக தெரியாது என சொல்கிறார். நீ பத்திரத்தை வாங்கி படித்து பார்த்து இருக்கலாமே என மீனா கேட்க, எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்ததாக ஜீவா சொல்கிறார். பின் மூர்த்தி எதையோ யோசித்து கொண்டிருக்க தனம் என்ன யோசிக்கிறீர்கள் என கேட்கிறார். அப்போது மூர்த்தி ஜனார்தனனிற்கு வீட்டை கொடுத்தது தவறாக இருக்குமா என கேட்கிறார். அவங்க நாம சொன்ன விலைக்கு தான வாங்கி இருக்கார் என கேட்க, எதாவது சண்டை என்றால் மீனா வார்த்தைகளை விடுவார் என பயப்பட, தனம் அப்படி எல்லாம் நடக்காது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!