கதிர் பங்கை கேட்டு சண்டை போடும் பார்வதி, விஷயத்தை சொன்ன கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிர் பங்கை கேட்டு சண்டை போடும் பார்வதி, விஷயத்தை சொன்ன கண்ணன் - இன்றைய
கதிர் பங்கை கேட்டு சண்டை போடும் பார்வதி, விஷயத்தை சொன்ன கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிர் பங்கை கேட்டு சண்டை போடும் பார்வதி, விஷயத்தை சொன்ன கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா மீனா பெயரில் வீட்டை வாங்கியதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். பின் மீனா வீட்டில் சாப்பிட ஏற்பாடு செய்யப்படுகிறது. மறுபக்கம் முல்லை அம்மா மூர்த்தியிடம் வந்து கதிர் பங்கு பணத்தை கேட்கிறார். இந்த விஷயம் கண்ணன் மூலமாக கதிருக்கு தெரிய வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா வீட்டை வாங்கி கொண்டு அனைவரையும் வீட்டிற்கு சாப்பிட வர சொல்கிறார். அங்கே அனைவரும் சோகமாக இருக்க மீனாவின் அம்மாவிடம் எல்லாரையும் பார்த்து கவனித்து அனுப்ப வேண்டும். பரம்பரை வீடு கையை விட்டு சென்றதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார்கள். அதனால் அவங்க மனது சந்தோசப்படும்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்ல, எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என மீனாவின் அம்மா கேட்கிறார். அப்போது மீனா அப்பா எல்லாம் முடிந்தது ஆனால் மீனா பெயரில் வாங்கியது தெரிந்தும் அவங்க வருத்தப்பட்டார்கள் என சொல்கிறார்.

மீனா பெயரில் வாங்கியது பற்றி சொல்லலாமே என சொல்ல, சொன்னால் யாரும் ஒப்புக் கொள்ளமாட்டர்கள் என மீனாவின் அப்பா சொல்கிறார்.பின் மீனா மூர்த்தியிடம் அப்பா என் பெயரில் வீட்டை வாங்க இருப்பது உண்மையாகவே எனக்கு தெரியாது என சொல்ல, ஜனார்த்தனன் அதெல்லாம் ஒன்றும் இல்லை என் பெயரில் வாங்கினாலும் உன் பெயருக்கு தான் வர போகுது என சொல்கிறார். மூர்த்தி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என சொல்ல, என் பெயரில் நான் எந்த சொத்தும் வாங்கியதில்லை என சொல்கிறார். அனைவரும் ஜனார்த்தனன் செய்ததை நினைத்து மன வருத்தத்தில் இருக்கின்றனர். பின் மீனா அப்பா பணத்தை கொடுக்கிறார்.

மறுபக்கம் கதிர் முல்லை கடைக்கு வர வியாபாரம் பற்றி கேட்கின்றனர். முல்லை அப்பா எல்லாம் நல்லபடியாக முடிந்ததா என கேட்க, எல்லாம் முடிந்தது நான் எல்லாரையும் பார்த்தேன் என சந்தோசமாக பேசுகிறார். பின் முல்லை மீனா பெயரில் வீட்டை பதிவு செய்தது பற்றி சொல்ல, கடைசி நேரத்தில் முடிவை மாற்றியதை முல்லை சொல்கிறார். உடனே பார்வதி இப்படி எல்லாம் நடக்கும் என முன்னாடியே தெரியும் என சொல்ல, அவங்க பெயரில் வாங்கினாலும் மீனா பெயருக்கு தான் வர போகுது அவங்க சும்மா ஒன்றும் வாங்கவில்லையே பணம் கொடுத்து தான் வாங்கி இருக்காங்க என சொல்கிறார் முல்லை அப்பா .

உடனே முல்லை அம்மா வீட்டை விட்டு வந்துவிட்டால் பங்கு வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என சொல்ல, இனிமேல் தேவை இல்லாமல் பேசாதே என முல்லை சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி குடும்பத்தினர் வீட்டிற்கு வர, வீட்டை விற்றது பற்றி நினைத்து வருத்தப்படுகிறார்கள். பின் மீனா என் பெயரில் வாங்குவது எனக்கு தெரியாது தெரிந்தால் நான் ஒப்புக் கொள்ளாமல் இருந்துருப்பேன் என சொல்கிறார். பின் தனம் யார் பெயரில் வாங்கினால் என்ன விடு என சொல்கிறார். பின் முல்லை அம்மா வீட்டிற்கு வருகிறார். என்ன வீட்டை விற்றுவிட்டு விருந்து எல்லாம் முடிந்துவிட்டது போல என சொல்கிறார்.

கல்யாணத்தை நினைத்து பதட்டமாக இருக்கும் ராதிகா, ரிசப்ஷன் வேலைகளை தொடங்கிய பாக்கியா – இன்றைய எபிசோட்!

பின் வீட்டை விற்பதாக நாடகம் ஆடிவிட்டு இப்போது மீனா பெயரில் எழுதி கொடுத்துவிடீர்கள் நீங்க எல்லாரும் நன்றாக இருப்பீங்களா என கேட்கிறார். என் மாப்பிள்ளை இந்த வீட்டில் பிறக்கவில்லையா, அவருக்கு சொத்தில் உரிமை இல்லையா என பார்வதி கேட்கிறார். தனம் மீனா அப்பா பணம் கொடுத்து தான் வாங்கி இருப்பதாக சொல்ல, மல்லிக்கு கொடுத்திருக்கலாம் என முல்லை அம்மா சொல்கிறார். அவர் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மூர்த்தி கோவப்பட்டு அவனுக்கு பணம் தேவை என்றால் அவனை வந்து பேச சொல்லுங்கள் என கோவமாக பேசிவிட்டு கிளம்புகிறார்.

இதை எல்லாம் பார்த்த கண்ணனிற்கு கோவம் வருகிறது. உடனே கண்ணன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். நேராக கதிர் கடைக்கு செல்ல, கதிர் கண்ணனை பார்த்து வாடா என சந்தோசமாக கூப்பிடுகிறார். கண்ணன் ஒரு மாதிரி இருக்க, கதிர் என்னாச்சு ஏன் அமைதியாக இருக்கிறாய் என கேட்கிறார். உடனே கண்ணன் உனக்கு வீட்டை விற்பது பிடிக்கவில்லை என்றால் நேராக அண்ணனிடம் சொல்லி இருக்கலாம் என கேட்கிறார். என்ன சொல்கிறாய் என கதிர் கேட்க, உனக்கு பங்கு வேண்டும் என்றால் நேராக கேட்டிருக்கலாம் ஏன் அத்தையை அனுப்பி கேட்கிறாய் என கண்ணன் சொல்ல கதிர் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here