வீட்டை ஜனார்தனனிற்கு கொடுக்க முடிவு செய்யும் மூர்த்தி, மகிழ்ச்சியில் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீட்டை ஜனார்தனனிற்கு கொடுக்க முடிவு செய்யும் மூர்த்தி, மகிழ்ச்சியில் மீனா - இன்றைய
வீட்டை ஜனார்தனனிற்கு கொடுக்க முடிவு செய்யும் மூர்த்தி, மகிழ்ச்சியில் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீட்டை ஜனார்தனனிற்கு கொடுக்க முடிவு செய்யும் மூர்த்தி, மகிழ்ச்சியில் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் வீட்டிற்கு வந்து மூர்த்தியிடம் வீட்டை கொடுப்பதில் என்ன பிரச்சனை என கேட்கிறார். ஆனால் மூர்த்தி கொடுப்பதில் விருப்பம் இல்லாதது போல பேசுகிறார். பின் மீனா என் அப்பாவிற்கு கொடுப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம் என்னை மட்டும் ஏன் இந்த வீட்டு பெண்ணாக நினைக்கவில்லை என கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா மூர்த்தியை சந்திக்க வருகிறார். அப்போது மூர்த்தியிடம் வீட்டை விற்க முடியாமல் பல இடங்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் மார்க்கெட் விலையை விட அதிகமாக கொடுக்கிறேன் என சொல்கிறேன். நாளை உங்களுக்கு பூர்வீக வீட்டை பார்க்க வேண்டும் என தோன்றினால் கூட பிரச்சனை இல்லை. மேலும் என் காலத்திற்கு பின் எல்லாம் உங்க தம்பிக்கு தான் வர இருக்கிறது. அப்பறம் என்ன பிரச்சனை என கேட்க மூர்த்தி எதுவும் பேசாமல் இருக்கிறார். உடனே ஜனார்த்தனன் நல்ல முடிவாக சொல்லுங்கள் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பின் மூர்த்தி ஜீவாவிடம் பணம் எதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்க, மீனா என் அப்பா பணத்தை ஏன் வாங்காமல் இருக்கீர்கள் என தெரியவில்லை என மனதிற்குள் நினைக்கிறார். ஜீவா கொஞ்ச பணம் என்றால் ஏற்பாடு செய்யலாம் ஆனால் இவ்வளவு பணம் முடியாது என சொல்ல, உடனே மீனா மூர்த்தியிடம் என் அப்பாவிடம் கொடுக்க ஏன் தயங்கி இருக்கீங்க. கடைசியில் எங்களுக்கு வீடு வர கூடாது என நினைக்கிறீர்களா என கேட்க மூர்த்தி எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் மீனா என்னை உங்க வீட்டு பெண்ணாக நினைக்காமல் ஏன் ஜனார்த்தனன் பெண்ணாக நினைக்கிறீர்கள் என கேட்கிறார்.

மூர்த்தி எதுவும் பேசாமல் இருக்க தனம் அப்படி எல்லாம் இல்லை மீனா என சொல்கிறார். மறுபக்கம் கதிரிடம் முருகன் இன்னைக்கு லாபம் ஏதாவது வந்ததா என கேட்கிறார். கதிர் இல்லை என சொல்ல, இத்தனை நாள் ஆகிவிட்டது இனியும் முன்னேறி வருவோம் என்பதில் நம்பிக்கை இல்லை என்பது போல பேசுகிறார். பின் முல்லை மல்லி சொன்னது போல நடந்துவிட்டால் என்ன செய்வது என கேட்க கதிர் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என சொல்கிறார். பின் மூர்த்தி வீட்டில் சாப்பிட வர, ஐஸ்வர்யா முதல் சம்பளம் வாங்கியதால் பிரியாணி வாங்கி வந்து கொடுக்கிறார் .

ஈஸ்வரியை தனியாக சந்திக்க அழைக்கும் கோபி, பாக்கியாவை சந்தித்து பேசும் சந்துரு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அனைவரும் அதை சாப்பிட மீனா மீண்டும் இடம் பற்றி பேசுகிறார். இடம் கொடுப்பவர் என்ன சொல்கிறார் என கேட்க, மூர்த்தி அவருக்கு எதோ அவசரம் போல உடனே இடத்தை வாங்கி கொள்ள சொல்வதாக சொல்கிறார். பின் மீனா மீண்டும் கேட்கிறேன் என நினைக்காதீர்கள் என் அப்பா சொல்வது சரி தான ஏன் அவருக்கு கொடுப்பதில்லை என கேட்க, மூர்த்தி நீ சொல்வது புரிகிறது. எல்லாருக்கும் சம்மதம் என்றால் உன் அப்பாவிற்கு கொடுக்கிறேன் என சொல்ல எல்லாரும் சரி என சொல்கின்றனர். பின் மூர்த்தி சரி என சொல்கிறார். அதை கேட்டு மீனா சந்தோசப்படுகிறார். பின் மூர்த்தி வீடு கட்டுவது குறித்து விசாரிக்க வேண்டும் என சொல்ல எல்லாரும் சரி என சொல்கின்றனர். அப்போது மீனாவின் அப்பா வருகிறார். என்ன மூர்த்தி எல்லாரும் காலையில் ஒன்றாக அமர்ந்து பேசுவதாக சொல்ல வீட்டை பற்றி பேசுவதாக மூர்த்தி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here