கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கோவப்படும் மூர்த்தி, கதிரை திட்டிய பார்வதி – இன்றைய எபிசோட்!

0
கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கோவப்படும் மூர்த்தி, கதிரை திட்டிய பார்வதி - இன்றைய எபிசோட்!
கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கோவப்படும் மூர்த்தி, கதிரை திட்டிய பார்வதி - இன்றைய எபிசோட்!
கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கோவப்படும் மூர்த்தி, கதிரை திட்டிய பார்வதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடையில் இலவச பிரியாணி கொடுக்க அதனால் அண்ணாச்சி கோபப்படுகிறார். மறுபக்கம் கண்ணன் லட்சம் தொகையில் பொம்மைகளை வாங்கி வர மூர்த்தி கோவப்பட்டு சத்தம் போடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடையில் இலவச பிரியாணி கொடுக்க, அண்ணாச்சி வந்து என்ன இதெல்லம் என கேட்கிறார். ஆனால் முல்லை அப்பா கதிர் சொல்வதை கேட்காமல் இருப்பதாக சொல்ல உடனே அண்ணாச்சி மூர்த்தி சொன்னால் தான் அவன் கேட்பான் என சொல்கிறார். பின் கதிரிடம் இன்று ஒருநாள் போட்டதே போதும் என சொல்ல ஆனால் கதிர் கேட்பதாக இல்லை. பின் அண்ணாச்சியை சாப்பிட்டுவிட்டு போக சொல்ல, ஆனால் அண்ணாச்சி கோவமாக கிளம்பி செல்கிறார்.பின் இடம் வாங்குவருக்கு ஜீவா போன் செய்து பார்க்க, ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

சரவணன் அவர் எங்கையாவது வெளியே இருப்பார் என சொல்ல, காலையில் நேரில் சென்று பார்க்கலாம் என சொல்கிறார். பின் அண்ணாச்சி வர கதிர் கடையில் கூட்டம் இருந்ததாக சொல்கிறார். ஜீவா பரவாயில்லை என சொல்ல, அண்ணாச்சி இலவசமாக பிரியாணி போடுகிறான் என சொல்கிறார். மூர்த்தி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இலவச பிரியாணி சாப்பிட்டால் கடைக்கு நஷ்டம் வரும் என சொல்ல ஜீவா நான் சென்று கேட்கிறேன் என சொல்கிறார். ஆனால் மூர்த்தி உன் வேலையை நீ பார் என சொல்கிறார். பின் அனைவரும் இலவச பிரியாணியை சாப்பிட்டுவிட்டு கிளம்ப, பார்வதி வெறும் அண்டாவை பார்த்து கோபப்படுகிறார்.

திருமணத்தை நிறுத்த வரும் ஈஸ்வரி, ராதிகா கழுத்தில் தாலி கட்ட போகும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஊருக்கே இலவச பிரியாணி போட்டுவிட்டு நாம உப்புமா சாப்பிட முடியுமா என கோவமாக பேசிவிட்டு கிளம்புகிறார். அவர் பேசியதை பார்த்து முல்லை வருத்தப்பட்டு அழ நாளை ஒரு நாள் எனக்கு கொடு என கதிர் தைரியம் சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் பாண்டியன் கயலுக்கு பொம்மை வாங்கி வருகிறார், பின் குடும்பத்தில் அனைவருக்கும் இனிப்பு வாங்கி கொடுக்க உனக்கு எப்படி இவ்வளவு பணம் என அனைவரும் கேட்கின்றனர். பின் மூர்த்திக்கும் கண்ணன் இனிப்பு கொடுக்க, பணம் எப்படி வந்தது என கேட்கிறார். உடனே கண்ணன் மேடம் கொடுத்ததாக சொல்ல, மூர்த்தி கோவப்பட்டு கத்துகிறார். இந்த குடும்பத்தில் பிறந்துவிட்டு உனக்கு மட்டும் ஏன் புத்தி இப்படி போகுது என மூர்த்தி சத்தம் போடுகிறார். தனம் அதை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!