ஜனார்த்தனன் பேசியதால் வருத்தப்படும் மீனா.. ஆறுதல் சொன்ன தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
ஜனார்த்தனன் பேசியதால் வருத்தப்படும் மீனா.. ஆறுதல் சொன்ன தனம் - இன்றைய
ஜனார்த்தனன் பேசியதால் வருத்தப்படும் மீனா.. ஆறுதல் சொன்ன தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
ஜனார்த்தனன் பேசியதால் வருத்தப்படும் மீனா.. ஆறுதல் சொன்ன தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா தன்னுடைய வீட்டிற்கு மீனாவை வர சொல்ல, ஆனால் மீனா இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம் என சொல்கிறார். பின் தனம் மீனாவிற்கு ஆறுதல் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கஷ்டப்படுவதை பார்த்து ஜனார்த்தனன் அவரை குறை சொல்கிறார். பின் தன்னுடன் வரும்படி சொல்ல ஆனால் மீனா நான் கஷ்டப்படுவதற்கு காரணம் நீங்க தான் என சொல்கிறார். பின் எப்போது தான் எங்களை புரிந்து கொள்ள போகிறாய் என தெரியவில்லை என மீனாவின் அப்பா சொல்ல, உடனே மீனா அவர் பேசுவதை கேட்காமல் கிளம்பி செல்கிறார். பின் தனம் மீனாவை காணாமல் தேட மீனா தண்ணீர் பிடித்துவிட்டு வந்து கொண்டிருக்கிறார். தனம் மீனாவிடம் நீ ஏன் தண்ணீர் பிடிக்க சென்றாய் என கேள்வி கேட்கிறார். உடனே ஐஸ்வர்யா ஜனார்த்தனன் பார்த்து பேசியதை சொல்ல, மீனா அதை நினைத்து அழுகிறார்.

Follow our Instagram for more Latest Updates

உடனே தனம் என் அம்மாவும் தான் நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவில்லை. அது போல தான் உன் அப்பா, அவர் சொன்னது போல நீ வசதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நாம ஒரே குடும்பமாக சந்தோசமாக இருக்கிறோம். வீட்டில் யாரவது முடியாமல் போனால் பார்க்கவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் காசு இருக்கிறது. நாம ஒரு நாள் குன்னக்குடியில் இருக்கும் எல்லா சொத்தையும் வாங்க கூட செய்யலாம் என தனம் சொல்ல மீனா அதுவும் சரி தான் என சொல்கிறார். பின் மீனாவை குழந்தைகளை பார்த்துக் கொண்டு இரு நாங்க சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம் என சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

மறுபக்கம் ஜீவா வேலை செய்து கொண்டிருக்க ஜனார்த்தனன் வந்து அவருடைய வீட்டிற்கு வர சொல்கிறார். அப்போது ஜீவா தந்திரமாக வேலை செய்து எங்க குடும்பத்தை வெளியே அனுப்பிவிட்டு இப்போது நல்லவர் போல வேஷம் போடுகிறாய் என சொல்கிறார். பின் ஜனார்த்தனன் நான் சேர்த்து வைத்த சொத்து எல்லாம் உங்களுக்கு தான் என சொல்ல, ஜீவா கோவப்பட்டு பேசுகிறார். எனக்கு என்ன குடும்பம் இல்லையா மொத்த குடும்பத்தையும் வெளியே அனுப்பிவிட்டு இப்போது வந்து என்னை மட்டும் கூப்பிட்டால் நான் வந்துவிடுவேனா என கேட்கிறார். இப்படி உங்க மகளிடம் பேசி பாருங்கள் அவள் மூக்கை உடைக்கும் படி பேசி இருப்பாள் என சொல்லிவிட்டு ஜீவா கிளம்புகிறார்.

ராதிகா அலுவலகத்தில் கேட்டரிங் ஆர்டர் வாங்கிய பாக்கியா.. விபத்தில் சிக்கிய இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் கண்ணன் அலுவலகத்தில் பாட்டு பாடி கொண்டிருக்க மேனேஜர் வந்து திட்டிவிட்டு செல்கிறார். அப்போது வயதான ஒருவர் பேங்க் வருகிறார். கண்ணன் அவரிடம் என்ன வேண்டும் என கேட்க, அவர் லோன் விஷயமாக வருவதாக சொல்கிறார். கண்ணன் அவருக்கு உதவி செய்ய, கண்ணன் மேடத்திடம் பேச வைக்கிறார். அப்போது அருகில் இருப்பவர் மேடம் லஞ்சம் கொடுத்தால் தான் செய்து கொடுப்பார் என சொல்ல, அந்த வயதானவர் மீண்டும் லோன் கிடைக்காமல் வருகிறார். அப்போது கண்ணன் என்ன ஆச்சு என கேட்க, அந்த மேடம் லோன் தர பணம் கேட்பதாக சொல்கிறார். கண்ணன் இப்படி கஷ்டப்படுபவர்களிடம் கேட்டால் நீங்க என்ன செய்வீங்க என கேட்க, அந்த முதியவர் அழுது கொண்டே இருக்கிறார். கண்ணன் நீங்க பயப்படாதீங்க அவங்க கண்டிப்பாக லோன் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

நீங்க என்னை நம்புங்கள் நான் கண்டிப்பாக வழி செய்கிறேன் என சொல்லி, போன் நம்பரை வாங்கி கொள்கிறார். பின் கண்ணன் நீங்க எதற்கும் கவலை படாதீங்க என சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி கடையில் வேலை பார்த்து கொண்டிருக்க ஜீவா வருகிறார். அவரிடம் மூர்த்தி முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கிறது என கேட்க, அப்போது ஜீவா ஜனார்தனனை பார்த்ததாக சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!