வீடு வசதி இல்லை என புலம்பும் மீனா.. அதை கேட்டு வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீடு வசதி இல்லை என புலம்பும் மீனா.. அதை கேட்டு வருத்தப்படும் கதிர் - இன்றைய
வீடு வசதி இல்லை என புலம்பும் மீனா.. அதை கேட்டு வருத்தப்படும் கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீடு வசதி இல்லை என புலம்பும் மீனா.. அதை கேட்டு வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி புது இடத்திற்கு நாளை பத்திர பதிவு நடைபெற இருப்பதாக சொல்ல, குடும்பத்தினர் அதை கேட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். பின் மீனா வீடு பிடிக்கவில்லை என சொல்ல, அதை கேட்டு கதிர் வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க, அப்போது தனம் பெண்கள் எல்லாரும் ஹோட்டலை கவனித்து கொள்ளலாம் என சொல்கிறார். அப்போது மீனா குழந்தைகளை யார் பார்த்து கொள்வது என கேட்க, ஆனால் தனம் ஒரு ஆள் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். அப்போது மூர்த்தி நன்றாக யோசித்து கொள்ளுங்கள் என சொல்கிறார். பின் கதிர் ஹோட்டலில் எல்லாம் அப்படியே இருப்பதாக சொல்கிறார். ஒரு வாரத்தில் நான் கடைக்கு வருகிறேன் என கதிர் சொல்கிறார். பின் மூர்த்தி நாளைக்கு பத்திர பதிவு வைத்து கொள்ளலாம் என சொன்னதாக சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

பின் எல்லாரும் அதை கேட்டு சந்தோசப்பட, கதிர் என்னால் தான் அன்னைக்கு நடக்க வேண்டிய பத்திர பதிவு நடக்காமல் போனதாக சொல்கிறார். அப்போது மூர்த்தி நீ வராமல் இருந்ததால் தான் இப்போது எல்லாரும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். பின் எல்லாரும் தூங்க கண்ணன் பாத்ரூம் வருவதாக சொல்லி ஐஸ்வர்யாவை எழுப்புகிறார். அப்போது மீனா எழுந்து ஜீவாவிடம் ஹோட்டலில் வேலை செய்வது சரியாக வருமா என பேச, மூர்த்தி அதை தான் நானும் சொல்கிறேன் என சொல்கிறார். எல்லாம் காலையில் பேசலாம் என மூர்த்தி சொல்கிறார்.

மறுநாள் ஐஸ்வர்யா வாக்கிங் நடக்க, மீனா இந்த வீட்டில் வாக்கிங் போறியா என கேட்கிறார். அப்போது மீனா உனக்கு இந்த வீடு வசதியாக இருக்கிறதா என கேட்க, குடும்பமாக இருப்பது தான் சந்தோசம் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மீனா இந்த வீடு வசதியாக இல்லை என சொல்ல கதிர் அதை கேட்டுவிடுகிறார். இந்த வீட்டில் தனியாக இடம் இல்லை, ஜீவாவுடன் தூங்க முடியவில்லை என சொல்ல, கூட்டு குடும்பம் என்றால் அப்படி தான் இருக்கும் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் கதிர் உங்களுக்கு வீடு பிடிக்கவில்லையா என கேட்க, மீனா நீங்களே சொல்லுங்க இந்த வீடு வசதியாக இருக்கிறதா என கேட்கிறார். நல்ல வீடு கிடைத்தால் சென்றுவிடலாம் என கதிர் சொல்ல, என்னால் உண்மையாகவே பொறுத்து இருக்க முடியவில்லை என மீனா சொல்ல, உடனே கதிர் உங்களுக்கு என்ன வசதி வேண்டும் என கேட்கிறார்.

தமிழகத்தில் இன்று (நவ. 23) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பின் மீனா நான் என் குடும்பத்தை விட்டு வந்தேன் என சொல்ல, கதிர் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். மீனா உங்களுக்காக நான் பொறுமையாக இருக்கேன் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா நீங்க உங்க அப்பாவிடம் தான் கடுப்பை காட்ட வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி, கண்ணன், ஜீவா, கதிர் பத்திர அலுவலகத்திற்கு வருகின்றனர். இன்னைக்கு எல்லாம் முடிந்துவிடும் என நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கின்றனர். இடத்துக்காரர் வந்துவிட்டதாக ஜீவா சொல்ல, அவர் ஊருக்கு போணுமாம் அதனால் தான் பத்திர பதிவு சீக்கரம் செய்ய சொன்னார். ஆனால் அன்னைக்கு முடியவில்லை. இன்னைக்கு கஷ்டப்பட்டு அவரை வர வைத்து இருக்கிறோம் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!