பெரிய வீட்டிற்கு போக வேண்டும் என செல்லும் மீனா.. பிரச்சனையை கிளப்ப வரும் மல்லி, கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

0
பெரிய வீட்டிற்கு போக வேண்டும் என செல்லும் மீனா.. பிரச்சனையை கிளப்ப வரும் மல்லி, கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
பெரிய வீட்டிற்கு போக வேண்டும் என செல்லும் மீனா.. பிரச்சனையை கிளப்ப வரும் மல்லி, கஸ்தூரி - இன்றைய எபிசோட்!
பெரிய வீட்டிற்கு போக வேண்டும் என செல்லும் மீனா.. பிரச்சனையை கிளப்ப வரும் மல்லி, கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா ஜீவாவிடம் வேற வீட்டிற்கு சென்று விடலாம் என சொல்ல, ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார். பின் மல்லி கஸ்தூரி வந்து பார்வதி கோவத்தை அதிகரிக்கும் படி பேசுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஜீவாவிடம் நாம வேற வீட்டிற்கு சென்று விடுவோம். இந்த வீடு வசதி இல்லை என சொல்கிறார். அதை கேட்டு ஜீவா இனிமேல் இப்படி யாரிடமும் சொல்லாதே என சொல்ல, மீனா ஏன் என கேட்கிறார். நேத்து நடந்ததிற்கு நம்மை எதுவும் சொல்லாமல் இருப்பதே பெரிய விஷயம் என சொல்கிறார். பின் முல்லை மீனா ஜீவாவை சாப்பிட வர சொல்கிறார். அப்போது எல்லாரும் சேர்ந்து சாப்பிட மூர்த்தி சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்கிறார். அப்போது பார்வதி நீங்க தான் கடை திறப்பு விழாவிற்கு வந்தீர்களே என மாட்டி விடுகிறார். எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது என மீனா சொல்ல, மீனாவும் வந்ததை பார்வதி சொல்கிறார். பின் மீனா தனத்திடம் வேற வீட்டிற்கு சென்று விடுவோம் என சொல்கிறார். ஏன் மீனா என தனம் கேட்க நாம நிறைய பேர் இருக்கோம் ஆனால் வீடு ரொம்ப சின்னதாக இருப்பதாக மீனா சொல்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைய, முல்லை இந்த வீடு உங்களுக்கு பிடிக்கவில்லையா என கேட்கிறார். வீடு இருவருக்கு என்றால் சரியாக இருக்கும், ஆனால் எல்லாருக்கும் வீடு குட்டியாக இருப்பதாக மீனா சொல்கிறார். பின் ஐஸ்வர்யா வீடு சின்னதாக இருந்தால் என்ன எல்லாரும் சேர்ந்து இருப்பது தான் சந்தோசம் என சொல்ல, மீனா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் முல்லை நீங்க ரூமில் படுத்துக் கொள்ளுங்கள் என சொல்ல, அங்கே தான் பெரியம்மா படுத்து இருக்காங்களே என மீனா சொல்கிறார். அவங்களை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்ல, ஆனால் பாத்ரூம் என சொல்கிறார். பின் கதிர் எல்லாரும் இங்கையே இருங்க நான் எல்லா வசதியையும் செய்து கொடுக்கிறேன் என சொல்கிறார்.

பின் மீனா நாம வேற வீடு பார்த்து செல்லலாம் என சொன்னதாக சொல்கிறார். இவ்வளவு பெரிய குடும்பம் என்றால் வாடகைக்கு வீடு கொடுக்கமாட்டார்கள் என தனம் சொல்கிறார். புது வீடு கட்டி முடித்துவிடலாம் என மூர்த்தி சொல்கிறார். பின் மூர்த்தி கடைக்கு கிளம்ப, கதிர் ஹோட்டல் கிளம்புகிறார். கதிர் எனக்கும் கடைக்கு வர ஆசையாக இருப்பதாக சொல்ல ஆனால் ஹோட்டல் முக்கியம் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா முல்லையிடம் போட்டி பற்றி கேட்க அவர் சொல்கிறார். அதன் பின் பார்வதியை தனம் சாப்பிட வர சொல்ல, சாப்பிடுவோம் என சொல்கிறார். முல்லை பார்வதியை பேச விடாமல் செய்ய, தனத்திடம் எதுவும் நினைத்து கொள்ளாதீர்கள் என சொல்கிறார்.

TNPSC குரூப் 1 தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – தேர்வுக்கான விதிமுறைகள் இதோ!

அதன் பின் மல்லியும் கஸ்தூரியும் காரில் முல்லை வீட்டிற்கு வருகின்றனர். கஸ்தூரி பெரிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் யாராலயும் அசைக்க முடியாது என சொன்னார்கள் இப்போ என்ன ஆச்சு என நக்கல் அடிக்கிறார். பின் கஸ்தூரி தனத்தை பார்த்து அழுவது போல நடிக்கிறார். ஐஸ்வர்யா புது வீடு கட்ட இருப்பதால் நாங்க வெளியே வந்தோம் என சொல்ல, உங்களை மீனா அப்பா துரத்தி விட்டதாக தான் ஊர் முழுவதும் பேசுவதாக மல்லி சொல்கிறார். பின் தனம் நாங்க வீட்டை விற்றுவிட்டோம் அதனால் தான் வெளியே வந்தோம் என சொல்கிறார்.

பின் கஸ்தூரி உன் அப்பா இப்படி செய்து இருக்க கூடாது என சொல்கிறார். மல்லி கண்டிப்பாக வீடு கட்டுவீங்களா என கேட்க கண்டிப்பாக கட்டுவோம் என தனம் சொல்கிறார். முல்லை இதெல்லாம் எங்க பிரச்சனை என சொல்கிறார். பின் முல்லை மல்லியை கிளம்ப சொல்ல, மல்லி பார்வதியிடம் சென்று விவரத்தை பேச, பார்வதி பணம் வந்ததும் எல்லாரும் வந்துவிட்டார்கள் என சொல்கிறார். தனியா வருவது என்றால் காசை வைத்து கொண்டு முன்னேறலாம் மீண்டும் எல்லாரையும் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள் என கோவமாக பேசுகிறார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!