வீட்டு வேலைகளை தனியாக செய்யும் மீனா, வருத்தப்பட்டு உதவி செய்யும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீட்டு வேலைகளை தனியாக செய்யும் மீனா, வருத்தப்பட்டு உதவி செய்யும் ஜீவா - இன்றைய
வீட்டு வேலைகளை தனியாக செய்யும் மீனா, வருத்தப்பட்டு உதவி செய்யும் ஜீவா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீட்டு வேலைகளை தனியாக செய்யும் மீனா, வருத்தப்பட்டு உதவி செய்யும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா தனி ஆளாக இருந்து குடும்பத்தை கவனித்து கொள்கிறார். அதை பார்த்து ஜீவா மீனா மீது அக்கறைப்படுகிறார். அதன் பின் ஜீவாவும் மீனாவிற்கு உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா எல்லாருக்கும் சாப்பாடு பரிமாற ஜீவா அவரை பார்த்து வருத்தப்படுகிறார். பின் மீனாவிடம் சாப்பிட்டியா என கேட்க, இனிமேல் தான் சாப்பிடணும் என சொல்கிறார். பின் முல்லை பாத்திரத்தை எடுத்து வைக்க ஆனால் மீனா எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். ஜீவா மீனாவை சீக்கிரம் சாப்பிட சொல்கிறார். பின் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க மூர்த்தியிடம் இன்னைக்கு கதை எதுவும் இல்லையா என கேட்டு கிண்டல் செய்கின்றனர். அப்போது மீனா பாண்டியன் தூங்கிவிட்டான் என சொல்ல, கயலை தான் தூங்க வைக்க வேண்டும் என சொல்கிறார்.

இனியாவிற்கு கிடைத்த புது நட்பு, கேட்டரிங் ஆர்டரை வேகமாக முடிக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அப்போது கதிர் கயலை நான் தூங்க வைக்கிறேன் என சொல்ல, அவள் பாட்டு பாடினால் நன்றாக தூங்குவாள் என சொல்கிறார் தனம், கதிர் பாட்டு பாட ஆனால் கயல் தூங்கவில்லை. பின் மீனா அவளை தூங்க வைக்க செல்கிறார். மறுபக்கம் தனம், ஐஸ்வர்யா, முல்லை தூக்கம் வராமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா வேலை செய்த அசதியில் தரையில் தூங்கிவிடுகிறார். ஜீவா மீனாவை தேடி வந்து பார்க்க அவர் அசதியில் தூங்குவதை பார்த்து வருத்தப்படுகிறார். மறுநாள் காலையில் மீனா எழுந்து கோலம் போட கண்ணன் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பக்கத்து வீட்டு பெண்கள் வந்து பார்த்துவிட்டு முல்லையை பார்க்க வருகின்றனர். முல்லையிடம் இந்த வீட்டு ராசி இல்லாத வீடு என பூட்டி கிடந்தது, ஆனால் ஒரே வீட்டில் 3 பேர் கர்ப்பமாக இருப்பது பெரிய விஷயம் என அவர்கள் சொல்கிறார்கள். பின் கண்ணன் வேலையில் உள்ள கஷ்டங்களை சொல்ல, ஜீவா எல்லா பக்கமும் இதே பிரச்சனை தான் என சொல்கிறார். பின் மீனா எல்லாருக்கும் மாத்திரை எடுத்து கொடுக்கிறார். ஜீவா மீனாவை பார்த்து பெருமைப்படுகிறார். பின் தனம் பாத்திரம் கழுவ வர ஆனால் மீனா வேண்டாம் என சொல்கிறார். மீனா தனியாக பாத்திரம் கழுவ ஜீவா பார்த்துவிட்டு நீ எழுந்திரு நான் கழுவுகிறேன் என சொல்கிறார். ஆனால் மீனா வேண்டாம் என சொல்ல, ஜீவா மீனாவிற்கு உதவி செய்கிறார். மீனா அதை பார்த்து சந்தோசப்பட இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!