வீட்டு வேலைகளை தனி ஆளாக செய்து களைப்பான மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீட்டு வேலைகளை தனி ஆளாக செய்து களைப்பான மீனா - இன்றைய
வீட்டு வேலைகளை தனி ஆளாக செய்து களைப்பான மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீட்டு வேலைகளை தனி ஆளாக செய்து களைப்பான மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா வீட்டு வேலைகளை எல்லாம் தனி ஆளாக நின்று செய்கிறார். அதனால் கடுப்பான அவர் ஜீவாவிடம் இது குறித்து புகார் செய்கிறார். பின் கண்ணன் தனம் கர்ப்பமாக இருப்பதால் மூர்த்தியை கிண்டல் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் வீட்டில் மூன்று பேர் கர்ப்பமாக இருக்க, அதனால் மீனா எல்லா வேலைகளையும் செய்கிறார். மீனாவிடம் தனம் ஆப்பிள் எடுத்து வர சொல்வதும், ஐஸ்வர்யா தண்ணி கொண்டு வர சொல்வதும் என எல்லா வேலைகளையும் செய்து களைப்பில் இருக்கிறார். பின் மீனா கயல், பாண்டியன் இருவருக்கும் ஓடி ஓடி சாப்பாடு கொடுக்கிறார். அதன் பின் மீனாவால் முடியவில்லை. அப்போது, கர்ப்பமாக இருக்கும் மூவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து மீனாவிற்கு கோவம் வருகிறது.

உடனே ஜீவாவிற்கு போன் செய்து மீனா வர சொல்கிறார். ஜீவா வந்ததும் வீட்டில் மூன்று பேர் கர்ப்பமாக இருப்பதால் வேலை அதிகமாக இருப்பதாக சொல்கிறார். பின் நானும் கர்ப்பமாக இருந்திருக்கலாம் என தோன்றுவதாக சொல்கிறார். உடனே ஜீவா கதிர் முல்லைக்கு இது முதல் குழந்தை என சொல்ல, தனம் அக்காக்கு இது இரண்டாவது குழந்தை தான என மீனா சொல்கிறார். அவர்கள் நீ கர்ப்பமாக இருக்கும் போது பார்த்து கொண்டார்கள் என ஜீவா சொல்ல, அவங்க என்னை ஒரு ஆளாக பார்த்துக் கொண்டார்கள். ஆனால் நான் அவர்கள் மூன்று பேரை பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

கேட்டரிங் ஆர்டருக்கு அமிர்தாவை சேர்த்து கொள்ளும் பாக்கியா, இனியாவை திட்டிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் ஐஸ்வர்யா மீனாவை அழைக்க, கடுப்புடன் மீனா உள்ளே செல்கிறார். ஜீவா கணக்கு பார்த்து கொண்டிருக்க மூர்த்தி வந்து வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது என கேட்கிறார். அப்போது அவருக்கு ஜீவாவை பார்க்க வெட்கமாக இருக்க, ஜீவா நக்கலடிக்கிறார். அதன் பின் கண்ணன் வந்து மூர்த்தியிடம் அடுத்த குழந்தை எப்போது என கேட்டு கிண்டல் செய்கிறார். மறுபக்கம் பெண்கள் வாந்தி எடுக்க மீனா அவர்களை கிண்டல் செய்கிறார்.

அடுத்து நீங்க கர்ப்பமாக இருக்க போறீங்க என முல்லை சொல்ல, நீங்க எல்லாரும் வாந்தி எடுப்பதை பார்த்து எனக்கு ஆசை போய்விட்டது என மீனா சொல்கிறார். மீனா இப்பவே என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நீங்க எல்லாரும் உங்க வீட்டில் இருந்து யாரையாவது அழைத்து வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என மீனா சொல்கிறார். அப்புறம் எல்லாருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடக்குமா என கேட்க, அதெல்லாம் அப்புறம் முடிவு செய்யலாம் என தனம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!