புது சமையல் ஆர்டரால் மகிழ்ச்சி அடையும் கதிர் & முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் திருப்பம்!

0
புது சமையல் ஆர்டரால் மகிழ்ச்சி அடையும் கதிர் & முல்லை - பாண்டியன் ஸ்டோர்ஸ் திருப்பம்!
புது சமையல் ஆர்டரால் மகிழ்ச்சி அடையும் கதிர் & முல்லை - பாண்டியன் ஸ்டோர்ஸ் திருப்பம்!
புது சமையல் ஆர்டரால் மகிழ்ச்சி அடையும் கதிர் & முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் திருப்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்போது பழைய படி அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கான நாட்கள் தொலைவில் இல்லை என்பது போல் தற்போது சீரியல் நகர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்து வருவதாக ஊர் முழுவதும் மக்கள் ஆச்சர்யமடைந்து செல்வது போல் தான் முன்னதாக இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது குடும்பத்தில் பல பிரச்சனைகள் எழுந்து அடிக்கடி சண்டை போடுவது போல் காட்டப்படுகிறது. இப்படி ஒரு சண்டையில், கதிர் மற்றும் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இதனால் மொத்த குடும்பமும் இடிந்து விட்டது. ஆனால், கதிர் முல்லைக்காக வாங்கிய கடனை அடைத்து விட்டு தான் மீண்டும் வீட்டிற்குள் வருவேன் என்று சொல்லி விட்டார்.

இதனால் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு ஆகி விட்டது. தற்போது தான் அனைவரும் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றனர். ஆனால், வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர் மற்றும் முல்லை இருவரும் என்ன தொழில் செய்வது என்று தெரியாமல், ஆரம்பத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். பின்னர், முல்லை கொடுத்த யோசனையின் படி ஹோட்டல் தொழிலை தொடங்கி விட்டார்கள். இதற்கான மளிகை ஜமான்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் இருந்து தான் வாங்குகின்றனர்.

தமிழகத்தில் 4500 அரசு ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

இவர்களை நினைத்து மிகவும் கவலையில் இருந்த தனம் ஹோட்டல் தொழிலில் இவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று கடைக்கு வரும் கஸ்டமரை கதிர் ஹோட்டலிற்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் வீட்டு விசேஷத்துக்கு சமைக்க கதிர் ஹோட்டலில் ஆர்டர் கொடுக்கின்றனர். அவர்களும், தனம் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று கதிருக்கு ஆர்டரை கொடுக்கின்றனர். இதனால் கதிர் மற்றும் முல்லை இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!