‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம், தனம் கொடுத்த பரிசு – வைரலாகும் ப்ரோமோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம், தனம் கொடுத்த பரிசு - வைரலாகும் ப்ரோமோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம், தனம் கொடுத்த பரிசு - வைரலாகும் ப்ரோமோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயலின் பிறந்தநாள் கொண்டாட்டம், தனம் கொடுத்த பரிசு – வைரலாகும் ப்ரோமோ!

கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை கதையாக கொண்டுள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அடுத்த வாரம் கயலின் முதல் பிறந்தநாள் கொண்டாட இருக்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனும் ஐஸ்வர்யாவையும் வீட்டிற்குள் தனம் கூட்டிக் கொண்டு வந்துவிட்டார். மூர்த்தி அது பிடிக்காதது போல நடந்து கொண்டாலும் மனதிற்குள் சந்தோசமாக இருக்கிறார். கண்ணன் அண்ணனை பார்க்க முடியாமல் இருக்க, ஐஸ்வர்யா எல்லாருக்கும் சமைத்து கொடுத்து தனத்தின் மனதில் இடம் பிடிக்கிறார். இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கயல் முதல் நாள் கோலாகலமாக கொண்டாட இருக்கிறார்கள்.

தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!

லட்சுமி அம்மா இறந்ததால் கயல் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடலாம் என மூர்த்தி சொல்ல, மீனா அதை பிடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் கயல் பிறந்தநாள் அன்று மீனாவின் அப்பா அம்மா செயின் வளையல் எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதை பார்த்த மீனா பாத்தீங்களா என் அம்மா அப்பாவை கயலுக்கு தங்க நகைகள் வாங்கி இருக்காங்க, உங்க அண்ணா அண்ணி எதுவும் செய்யவில்லை என குத்திக்காட்டி பேசுகிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வெண்பா – அடுத்து வரப்போகும் எபிசோட்!

அதை நினைத்து ஜீவா வருத்தப்பட அலங்காரம் செய்து கேக் வெட்டுகின்றனர். அப்போது மூர்த்தி கயலுக்கு தங்க செயின் போடுகிறார். பின் தனத்தை பார்க்க ஒருவர் வந்து கயலுக்கு ஆர்டி தொடங்கியாச்சு என சொல்ல என்ன அது என மீனா கேட்கிறார். கயலுக்கு ஒரு வயசு ஆக போகிறது அதனால் ஒரு லட்சம் டேபாசிட் செய்திருக்கோம் என சொல்கிறார். அதை பார்த்து மீனா மிகவும் சந்தோசப்படுகிறார். மீனாவின் அப்பா அம்மா அதிர்ச்சி அடைகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here