விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் இணைந்து ஒரு ரொமான்டிக் பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் பேராதரவுடன் சுமார் 750 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அந்த வகையில் ஒளிபரப்பான காலம் முதல் இதுவரையிலும் தனக்குரிய ரசிகர்களை தக்க வைத்திருக்கும் இந்த சீரியல் பல்வேறு விதமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையில் இத்தொடரில் புதிய முகங்கள் பலர் வந்து போயிருந்தாலும், ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த விஜே தீபிகாவுக்கு ரசிகர்கள் இன்று வரையும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக களம் இறங்கும் விஜய் டிவி பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஒரு சில மாதங்கள் மட்டுமே பயணித்திருந்த விஜே தீபிகா சில, பல காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். இந்த தொடரில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி, அதாவது நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகாவின் கெமிஸ்ட்ரி பலதரப்பட்ட ரசிகர்களுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. இவர்கள் இருவரும் அடுத்த கதிர் முல்லை ஜோடி போல மாறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான் விஜே தீபிகாவின் விலகல் அமைந்தது.

தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து – அரசின் புதிய உத்தரவு!!

இப்போது இந்த சீரியலை விட்டு விலகி இருக்கும் விஜே தீபிகா, நடிகர் சரவண விக்ரமுடன் இணைந்து ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த ரீல் ஜோடி விதவிதமான உடையலங்காரத்துடன் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அசத்தி வருகிறது. இப்படி இருக்க நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் இணைந்து ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் வரும் ரொமான்டிக் பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!