விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தீபிகாவின் ஆசை என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தீபிகாவின் ஆசை என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தீபிகாவின் ஆசை என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னால் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா தற்போது முதன் முறையாக மறைத்து வைத்திருந்த ஆசை ஒன்றை வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தீபிகாவின் ஆசை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலமாக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிடுகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் தீபிகா. இவர் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். முகப்பரு பிரச்சனையின் காரணமாக தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கிட்டதட்ட மூன்று மாதங்கள் வரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். சில மாதங்களே நடித்தாலும் கண்ணன், ஐஸ்வர்யா ஜோடிக்கு மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சீரியலை விட்டு விலகிய பிறகும் கூட தீபிகாவை ரசிகர்கள் ஐஸ்வர்யா என்றே அழைத்து வந்தனர் மற்றும் கண்ணனுடான நட்பை வளர்த்து வந்தார். சீரியலில் இருந்து தீபிகா விலகிய பிறகு முக பருவிற்கான சிகிச்சையை எடுத்து கொண்டார். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்து கொள்வார் என பேசப்பட்டது.

தனது மகன் அர்ஷின் புகைப்படத்தை பகிர்ந்த ஆலியா, சஞ்சீவ் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

ஆனால், தற்போது தீபிகா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சில்லுனு ஒரு காதல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். சீரியலில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார். VJ ஆக வேண்டும் என்பதே எனது மிக பெரிய ஆசை. வீட்டில் படிக்கிறேன் என்று பொய் சொல்லி தான் வந்தேன். அதற்கு பிறகு குடும்பத்தில் உள்ளவர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர் என முதன் முறையாக மறைத்து வைத்த ரகசியத்தை கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!