கொடைக்கானலிற்கு வரும் கோபி & ராதிகா, பாக்கியா குடும்பம், மூர்த்தி குடும்பம் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
கொடைக்கானலிற்கு வரும் கோபி & ராதிகா, பாக்கியா குடும்பம், மூர்த்தி குடும்பம் - இன்றைய
கொடைக்கானலிற்கு வரும் கோபி & ராதிகா, பாக்கியா குடும்பம், மூர்த்தி குடும்பம் - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
கொடைக்கானலிற்கு வரும் கோபி & ராதிகா, பாக்கியா குடும்பம், மூர்த்தி குடும்பம் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மகா சங்கமத்தில் கோபி ராதிகாவும் அவார்ட் நிகழ்ச்சிக்காக கொடைக்கானல் வந்திருக்க, மறுபக்கம் பாக்கியா தனது குடும்பத்துடன் கொடைக்கானல் வருகிறார். பின் மூர்த்தி குடும்பத்துடன் கொடைக்கானல் வந்திருக்கிறார்.

மகா சங்கமம்

இன்று “மகா சங்கமம்” சீரியலில், கோபி ராதிகாவுடன் கொடைக்கானல் வந்திருக்கிறார். அப்போது கோபி ரூம் புக் செய்ய செல்ல அங்கே கோபியின் நண்பன் ஒருவர் வருகிறார். அவர் கோபி அவார்ட் வாங்க இருப்பதால் வாழ்த்துக்களை சொல்கிறார். பின் யாருடன் வந்தாய் என கேட்க என் மனைவி உடன் என கோபி சொல்கிறார். அந்த நேரம் ராதிகாவுக்கு மயூரா போன் செய்ய அவர் அந்த பக்கமாக பேச செல்கிறார். பின் கோபியின் நண்பர் பாக்கியா வந்திருக்கிறாளா, அவளுடைய மட்டன் பிரியாணி அருமையாக இருக்குமே, எத்தனை வருடம் ஆகிவிட்டது என கேட்க, கோபி ராதிகாவை அவர் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்கிறார்

பின் கோபி நான் மட்டும் தான் இப்போதைக்கு வந்திருப்பதாக சொல்ல, பாக்கியா குழந்தைகள் எல்லாரும் நாளைக்கு வருவார்கள் என சொல்கிறார். பின் ராதிகாவை அழைத்து கொண்டு ரூமிற்கு செல்ல, ராதிகா கோபி நண்பரை அறிமுகம் செய்யவில்லை என கோபப்படுகிறார். பின் இருவரும் ரூமிற்கு வருகின்றனர். மறுபக்கம் எழில் பாக்கியா ஈஸ்வரி ராமமூர்த்தி இனியா செல்வி என அனைவரும் கொடைக்கானல் வருகின்றனர். ஈஸ்வரி தலை சுற்றுவதாக சொல்ல எழில் அவர்களுக்கு டீ வாங்கி கொடுக்கிறார். இனியா செல்பி எடுத்து சந்தோசப்படுகிறார். எழில் பாக்கியாவிடம் எந்த கவலையும் இல்லாமல் நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என சொல்கிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவை ரூமில் விட்டுவிட்டு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார். அப்போது ராதிகா நாளைக்கு அவார்ட் நிகழ்ச்சிக்கு நானும் வருவேன் என சொல்ல, ராதிகா நீங்க அவார்ட் வாங்குவதை நான் பார்க்க வேண்டும் என சொல்கிறார். கோபி அதை நினைத்து பதட்டமடைகிறார். மறுபக்கம் மூர்த்தி, தனம், கண்ணன், ஐஸ்வர்யா, பாண்டியன் உடன் கொடைக்கானல் வருகின்றனர். கண்ணன் பெரிய ஹோட்டலாக இருக்கிறது என சொல்ல, தேவராஜன் அண்ணா தான் ரூம் போட்டு இருப்பதாக மூர்த்தி சொல்கிறார். பின் அவர்களுக்கு ரூமை காட்ட, மூர்த்திக்கு ஜீவா நினைப்பாக இருக்கிறது.

கண்ணன் ஜீவா அண்ணன் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என சொல்ல, அனைவரும் ரூமிற்கு செல்கின்றனர். ராதிகா எந்த நேரமும் மயூராவுடன் பேசிக் கொண்டிருக்க கோபிக்கு அது கடுப்பாகிவிடுகிறது. கோபி வந்து பேசினாலும் ராதிகா மயூராவை பற்றியே பேசுகிறார். அம்மாவும் அண்ணனும் பார்த்துக் கொள்வார்கள் என கோபி சொல்ல, இருந்தாலும் அவளுக்கு நான் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது என சொல்கிறார். பின் மீண்டும் மயூரா போன் செய்ய கோபி கோபப்படுகிறார். பின் இனியாவிற்கு மெசேஜ் அனுப்ப ஆனால் மெசேஜ் போகவில்லை.

ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

எழில் குடும்பத்தை அழைத்து கொண்டு கோபி தங்கி இருக்கும் அதே ஹோட்டல் வருகின்றனர். எழில் ரூம் புக் செய்துவிட்டு வர, செல்வி என்னை போட்டோ எடு என இனியாவை சொல்கிறார். ஈஸ்வரி என்னையும் போட்டோ எடு என சொல்ல, அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். எல்லாரும் ரூமை நோக்கி நடந்து வர., பயங்கரமாக குளிர்கிறது என சொல்கிறார்கள். இனியா ரூம் எது என தெரியாமல் கோபி ரூமை திறக்க செல்ல, எழில் அது இல்லை என சொல்கிறார். இனியா நல்ல வேளை என சொல்ல, செல்வி அப்படி எல்லாம் கதவை திறக்க கூடாது என சொல்கிறார். அப்போது பார்த்து ராதிகா பால்கனியில் போன் பேச வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!