விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வைரலாகும் பதிவு!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் இனியா யார் தெரியுமா? - வைரலாகும் பதிவு!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் இனியா யார் தெரியுமா? - வைரலாகும் பதிவு!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வைரலாகும் பதிவு!

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் கடைக்குட்டி மகளான இனியா அவரது சிறு பிராயத்திலிருந்தே சின்னத்திரையில் அவரது நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர். அப்பேற்பட்ட இனியா நேஹா யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி இனியா யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் இனியா என்ற கதாபாத்திரத்தில் பள்ளி செல்லும் மாணவியாக நடித்து வருகிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை குழந்தை பருவத்திலிருந்தே சின்னத்திரையில் கச்சிதமாக நடித்து தற்போது பிசியான நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார் நேஹா மேனன். இவர் கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். தற்போது கல்லூரி படித்து வரும் இவருக்கு 19 வயது ஆகிறது.

TN Job “FB  Group” Join Now

பைரவி என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர் அதன் பிறகு பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்ச்செல்வி தொடரில் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவரது நடிப்பு திறமைக்கு பலனாக மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது சன் டிவி வாணி ராணி தொடர் தான். அந்த சீரியலில் ராதிகா மற்றும் நேஹாவின் அம்மா,பிள்ளை காம்போ மக்களிடத்தில் அதிக அளவில் பிரபலம் ஆகியது. அதிலிருந்து அனைவர் மனதிலும் தேனு என்று பதிவாகினார். இவ்வாறு சின்னத்திரையில் கலக்கிய நேஹா வெள்ளித்திரையிலும் 2016 ல் ‘நாரதன்’, ‘ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் ‘யட்சன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 ரொக்கத்தொகை – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் ராதிகா இயக்கத்தில் ஒளிபரப்பாகிய சித்தி 2 தொடரில் நடித்தார். குழந்தையாக பார்த்த ரசிகர்களுக்கு நேஹா வளர்ந்ததை பார்க்கும் போது சிலர் ஆதரித்தாலும் பலரும் உருவத்தை வைத்து ட்ரோல் செய்தனர். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அப்லோடு செய்து வருகிறார். இனியா பதிவிடும் பதிவுகளுக்கு ஒரு பக்கம் லைக்ஸ் வந்தாலும் அதே அளவுக்கு கிண்டல், கேலிகள் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!