சன் டிவியை அடித்து நொறுக்க விஜய் டிவி போட்டுள்ள மாஸ்டர் பிளான் – பிக் பாஸ் முடிஞ்சதும் இதான் டாப்பு!

0
சன் டிவியை அடித்து நொறுக்க விஜய் டிவி போட்டுள்ள மாஸ்டர் பிளான் - பிக் பாஸ் முடிஞ்சதும் இதான் டாப்பு!
சன் டிவியை அடித்து நொறுக்க விஜய் டிவி போட்டுள்ள மாஸ்டர் பிளான் – பிக் பாஸ் முடிஞ்சதும் இதான் டாப்பு!

பொதுவாகவே விஜய் டிவி சீரியல்களை விட சன் டிவி சீரியல்கள் தான் எப்பொழுதும் TRPயில் முன்னணி வகிக்கும். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவி TRP ரேட்டிங்கில் முன்னிலை வகிக்க மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளது.

TRP ரேட்டிங்:

பிரமாண்டமாக வித்தியாசமான கதைக்களத்துடன் பல சீரியல்களை டெலிகாஸ்ட் செய்தாலும் ஏனோ சன் டிவி ஒவ்வொரு வாரமும் பெறும் TRP ரேட்டிங்கை விஜய் டிவியால் தொட முடியவில்லை. குறிப்பாக கயல், சுந்தரி போன்ற தொடர்கள் முதல் இரண்டு இடங்களை விட்டு என்றும் சறுக்கியதே இல்லை. மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெறும்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படுவதால் சற்று நல்ல ரேட்டிங்கை அந்நிகழ்ச்சி பெற்று வருகிறது. அந்நிகழ்ச்சி முடிந்த பின் விஜய் டிவி பெங்காலி மொழியில் சூப்பர் ஹிட் அடித்த தொடர் ஒன்றை தமிழ் ரீமேக் செய்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாக்கியலட்சுமி தொடரும் பெங்காலி சீரியலின் ரீமேக் தான்.

தேர்தலில் ஜெயித்து கோபி, ராதிகா முகத்தில் கரியை பூசிய பாக்கியா – வரப்போகும் மாஸான எபிசோடுகள்!!

Exams Daily Mobile App Download

இதனால் இந்த புது தொடரின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிப்பிக்குள் முத்து என்ற சீரியலின் கதாநாயகன் ஜெய்த்தான் இந்த புது சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். பாக்கியலட்சுமி போல் இந்த தொடரும் ஹிட் அடித்து விட்டால் கட்டாயம் TRP ரேட்டிங்கில் விஜய் டிவி தற்போதைய நிலையை மாற்றி முன்னிலை வகிக்கும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!