ஸ்ருதி சொன்ன பொய்யால் சத்யா எடுத்த அதிரடி முடிவு – “மௌன ராகம் 2” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
ஸ்ருதி சொன்ன பொய்யால் சத்யா எடுத்த அதிரடி முடிவு - "மௌன ராகம் 2" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
ஸ்ருதி சொன்ன பொய்யால் சத்யா எடுத்த அதிரடி முடிவு – “மௌன ராகம் 2” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில், தருண் சத்யா காதலர்கள் என ஷீலா சொன்ன பொய்யை நம்பி வருண் சத்யாவிடம் கோவித்துக் கொள்ள அதனால் சத்யா முக்கிய முடிவு ஒன்றை எடுக்கப் போகிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

மௌன ராகம் 2:

மௌன ராகம் 2 சீரியலில் சத்யாவை ஆரம்பத்தில் இருந்தே ஸ்ருதிக்கு பிடிக்காமல் இருக்க, போதாதற்கு மல்லிகா தான் சத்யாவின் அம்மா என்ற உண்மை ஸ்ருதிக்கு தெரிய வருகிறது. அதனால் சத்யாவின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதால் பல வேலைகளை ஸ்ருதி செய்கிறார். அதெற்கெல்லாம் ஷீலாவும் உறுதுணையாக இருக்கிறார். ஸ்ருதி சத்யாவின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்பதால் தருண் சத்யா ஒருத்தரை ஒருத்தர் காதலித்ததாக சொல்கிறார். அதனால் மனம் உடைந்த வருண் மனைவி மீது நம்பிக்கை வைக்காமல் சந்தேகப்படுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து நிரூப் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் கேள்விக்கு பதில்!

இது பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் சத்யா வருண் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என தெரியாமல் இருக்கிறார். வருண் சத்யா சமைத்ததை சாப்பிடாமலும் சத்யாவிடம் பேசாமலும் தன்னுடைய வெறுப்பை காட்டி வருகிறார். அதனால் மனம் நொந்து போன சத்யா வருணிடம் இது பற்றி கேட்க அதற்கு வருண் நீயும் தருண்ணும் காதலித்தது எல்லாம் எனக்கு தெரியும் என சொல்கிறார். தம்பியை காதலித்துவிட்டு அண்ணனை திருமணம் செய்து கொள்ள எப்படி மனம் வந்தது என வருண் கேட்கிறார்.

பாக்கியாவின் நிலைமையை பார்த்து உடல்நிலை சரியில்லாமல் போன தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதனால் மனம் உடைந்து போன சத்யா முக்கிய முடிவு ஒன்றை எடுக்கிறார். அதாவது சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போக முடிவு செய்கிறார். செய்யாத தவறுக்கு விளக்கம் கூட கேட்காத ஒரு வீட்டில் இனிமேல் நான் இருக்கமாட்டேன் என சொல்லிவிட்டு பேக்கை எடுத்துக் கொண்டு செல்கிறார். அப்போது வருண் மட்டுமில்லாமல் ஸ்ருதி, ஷீலா ஆகியோரும் அதிர்ச்சி அடைகின்றனர். வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் மனோகர் ஷீலா மீது தான் சந்தேகப்படுவார் என்பதால் ஷீலா அடுத்து என்ன நடக்கும் என பதட்டத்தில் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here