அஜித்தின் “துணிவு” படத்தில் களமிறங்கும் விஜய் டிவியின் பிரபல ஜோடி – வைரலாகும் தகவல்!

0
அஜித்தின்
அஜித்தின் "துணிவு" படத்தில் களமிறங்கும் விஜய் டிவியின் பிரபல ஜோடி - வைரலாகும் தகவல்!
அஜித்தின் “துணிவு” படத்தில் களமிறங்கும் விஜய் டிவியின் பிரபல ஜோடி – வைரலாகும் தகவல்!

விஜய் டிவியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தற்போது, ட்ரெண்டிங் ஜோடியாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் இருவர், அஜித் நடிப்பில் வெளியாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித் படம்

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான அஜித் அவர்களின் அடுத்த படமான “துணிவு” ஹெச்.வினோத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இன்னும் இந்த படம் வெளியாக இருக்கும் அதிகாரபூர்வ தேதி வெளியாகவில்லை.

Exams Daily Mobile App Download

துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தில் கூடுதல் சிறப்பாக, விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி ஏகப்பட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக இருக்கும் அமீர் பாவனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் மூலமாக தன் கேரியரில் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற பாவனியின் ஆசை நிறைவேறி இருக்கிறது.

திடீரென முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இவர்களை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சிபியும் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சிபி தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது அஜித் படத்தில் அவர் நடிக்க இருக்கும் செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.. அஜித் படம் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், அதில் பிரபலமான நடிகர்களின் பங்கு இருப்பதால் ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!