விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய புகழ் – கவலையில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய புகழ் - கவலையில் ரசிகர்கள்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய புகழ் - கவலையில் ரசிகர்கள்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய புகழ் – கவலையில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி புகழ் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளியேறிய புகழ்:

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் நடிகர் புகழ். ஆரம்பத்தில் அவரது திறமைக்கு ஏற்ற வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து தனது முயற்சியால் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவரது காமெடி, கலாட்டா பட்டையை கிளப்பியது. ஒவ்வொரு எபிஸோடிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். புகழ் இருப்பதற்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை மகிழ்விப்பதையே தனது நோக்கமாக கொண்டு அசத்தினார்.

கண்ணன், ஐஸ்வர்யா காதலிப்பதை கண்டுபிடித்த பிரசாந்த் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

இதனை தொடர்ந்து புகழ் மிகவும் பிரபலமானார். இவரின் எண்ணற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் காமெடி & நடிப்புக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்து. இதையடுத்து பல நிகழ்ச்சிகளில் விஜய் டிவி புகழ் பங்கேற்க ஆரம்பித்தார். எவ்வளவு பிரபலமானாலும் தனது எளிமையாலும், கவரும் பேச்சாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த போது இனி புகழை பார்க்க முடியாது என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதிலும் அவரது காமெடிக்கு பஞ்சம் இல்லை. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உங்களுடைய ஆதரவால் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். விரைவில் பட ஷூட்டிங் முடிந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் புகழுக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!