வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் கண்கலங்கிய விஜய் டிவி புகழ் – ரசிகர்கள் உருக்கம்!

0
வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் கண்கலங்கிய விஜய் டிவி புகழ் - ரசிகர்கள் உருக்கம்!
வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் கண்கலங்கிய விஜய் டிவி புகழ் - ரசிகர்கள் உருக்கம்!
வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளில் கண்கலங்கிய விஜய் டிவி புகழ் – ரசிகர்கள் உருக்கம்!

விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி தனது திறமையின் மூலமாக தற்போது சினிமாவில் ஒரு காமெடியனாக கலக்கி வருபவர் நடிகர் புகழ், அவர் மறைந்த காமெடியன் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளான இன்று ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் புகழ் பதிவு:

சின்னத்திரையில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிப்பதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அந்த வகையில் பல பிரபலங்கள் சின்னத்திரையில் கலக்கி அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற்று தற்போது முன்னணி நடிகர் நடிகைகளில் ஒருவராக இருக்கின்றனர். அந்த வகையில் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடித்து பின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலமாக தன்னுடைய முழு திறமையும் காட்டி அதன் மூலம் திரைப்படங்களில் கலக்கி வருபவர் நடிகர் புகழ்.

கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை, அதிர்ச்சியில் சௌந்தர்யா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

அவர் சின்னத்திரையில் இந்த அளவிற்கு பிரபலமாக உறுதுணையாக இருந்தது காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி தான் என பல இடங்களில் சொல்லி இருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு திடீரென வடிவேல் பாலாஜி உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அவருடைய நினைவுகளுடன் இன்னும் கலக்கப்போவது யாரு டீம் பிரபலங்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள் என்பதால் புகழ் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதில் மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா, வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீங்க, உங்களுடைய இந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் பலவற்றை எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள் இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்துவிட்டீர்கள். அதாவது நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா, மிஸ் யூ மாமா என அதில் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here