விரைவில் அப்பாவாக போகும் விஜய் டிவி பிரபலம்.. அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விரைவில் அப்பாவாக போகும் விஜய் டிவி பிரபலம்.. அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விரைவில் அப்பாவாக போகும் விஜய் டிவி பிரபலம்.. அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விரைவில் அப்பாவாக போகும் விஜய் டிவி பிரபலம்.. அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவியில் பல சீசன்களை கடந்து மக்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சிங்கர் அஜய் கிருஷ்ணா. இந்நிலையில் அவரது குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவி பிரபலம்:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில், பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்தாலும் மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சாமானிய மக்களில் ஒருவராக இருந்து, தன்னுடைய பாடல் திறமை மூலமாக புகழின் உச்சிக்கு சென்றவர்கள் பலர் இருக்கின்றனர்.

செந்தில், ராஜலக்ஷ்மி தொடங்கி பூவையார் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சின்னத்திரை பிரபலமாக மாறிவிட்டனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் அஜய்கிருஷ்ணா. இவருடைய குரல் உதித் நாராயணன் போல இருப்பதாக பலர் பாராட்டி இருக்கின்றனர். இந்நிலையில் இவருடைய குரலின் ரசிகையாக இன்ஸ்டாவில் அறிமுகமான ஜெஸ்ஸி என்பவரை, இவர் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வேறு வேறு மதமாக இருந்தாலும், இரு மத முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் நேற்று அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பெற்றோர்களாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய மனைவியின் அழகான கர்ப்பகால புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!