தனது காதலியை கரம் பிடித்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – திருமண போட்டோஸ் வைரல்!

0
தனது காதலியை கரம் பிடித்த 'குக் வித் கோமாளி' புகழ் - திருமண போட்டோஸ் வைரல்!
தனது காதலியை கரம் பிடித்த 'குக் வித் கோமாளி' புகழ் - திருமண போட்டோஸ் வைரல்!
தனது காதலியை கரம் பிடித்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – திருமண போட்டோஸ் வைரல்!

விஜய் டிவியில் காமெடி திறமையால் அடையாளம் காணப்பட்டு, இன்று அனைவராலும் புகழப்படும் காமெடியனாக வளம் வரும் புகழ், இன்று தனது காதலியை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி .வருகிறது.

‘குக் வித் கோமாளி’ புகழ்:

விஜய் டிவியின் ஆல் டைம் பேவரிட் நிகழ்ச்சியான ‘அது இது எது’ நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் ஆன புகழ், பல அனுபவமிக்க நகைச்சுவை பிரபலங்களுடன் அவர்களை ஈடு செய்யும் அளவிற்கு திறமையாக ஆரம்பத்திலேயே பெயரை பெற்றவர். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவரின் தனி திறமை அடையாளம் காணப்பட்டு, மிகவும் புகழை அடைந்தார். நாளடைவில் புகழ் இருந்தால் அந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டும் அளவிற்கு வளர்ந்து வருகிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பிரபல நடிகர் புகழுக்கும், தனது நீண்ட நாள் காதலரான பென்சியாவுக்கும் சென்னையில் உள்ள ஈசிஆரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.

குறிப்பாக, இந்து முறைப்படி, இருதரப்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருதரப்பு ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றது. புகழும், பென்சியாவும் ஏழு ஆண்டுகளாக பழகி வருகின்றனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பிரமாண்ட வரவேற்பு விழா நடைபெறவுள்ளது. அதில், கோலிவுட்டின் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் புகழ் நடித்து விட்டார்.

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்நிலையில், தற்போது ‘காசே தான் கடவுளடா’ ‘ஆகஸ்ட் 16 1947’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, ‘விஜேஎஸ் 46’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் தாய்லாந்தில் படமாக்கப்பட்ட மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும் என்று முன்னதாக புகழ் அறிவித்திருந்தார். தற்போது புகழ் மற்றும் பென்சியாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!