விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மணிமேகலை வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக உள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.
மணிமேகலை வீட்டில் திருட்டு:
சின்னத்திரையில் பல்வேறு தடைகளை தாண்டி சாதித்தவர்கள் பலர். அதில் குறிப்பிடத்தக்கவர் விஜே மணிமேகலை. இவர் சன் மியூஸிக்கில் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கி பின்னர் விஜய் டிவிக்கு வந்தார். இடையில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அதையும் மீறி இருவரும் கரம் பிடித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மணிமேகலை குக் வித் கோமாளி மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து அசத்தினார்.
TN Job “FB
Group” Join Now
இருவரும் இணைந்து Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். இதற்கெனவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மணிமேகலையின் குடும்ப நண்பரான அரவிந்த், ஹுசைனின் வாகனத்தை ஓட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக அரவிந்த், அசோக் நகர் காவல் நிலையத்தில் மணிமேகலையின் சார்பாக புகார் அளித்துள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் பயன்பாடுகள்!
இந்த செய்தியை தற்போது மணிமேகலை அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், தனது கணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான கே.டி.எம் பைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருடு போய்விட்டதாகவும், அந்த பைக் திருமணத்திற்கு பின்னர் ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கியது எனவும் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். நண்பரின் வீடு அசோக் நகரில் உள்ளதால் இதுகுறித்து அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.