விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சிவாங்கிக்காக புகழ் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சிவாங்கிக்காக புகழ் செய்த காரியம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சிவாங்கிக்காக புகழ் செய்த காரியம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சிவாங்கிக்காக புகழ் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான சிவாங்கிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பல திரையுலக நண்பர்கள் சிவாங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புகழும் சிவாங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவாங்கி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சிவாங்கி மற்றும் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே இருவருக்கும் பல திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. தற்போது கூட சிவாங்கி நடிப்பில் வெளியான டான் திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலை அள்ளி குவித்து கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி, திரைப்பட ஷட்டிங் என இருவருமே மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர்

Exams Daily Mobile App Download

இன்று சிவாங்கியின் பிறந்தநாள் என்பதால் திரை பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ரசிகர்கள் பலரும் சிவாங்கியின் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சிவாங்கி பிறந்தநாளுக்காக Common Dp கூட ரசிகர்கள் வெளியிட்டனர். மேலும், சிவாங்கியின் மிகவும் நெருக்கமான அண்ணனான புகழும் சிவாங்கியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேறொரு பெண்ணை மனைவியாக ராதிகாவிடம் காட்டும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதாவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே. நீ என்னுடன் இருக்கின்ற காரணத்தால் எனக்கு தங்கை இல்லை என்கிற குறையே இல்லை. எந்த பிரச்சனை எனக்கு வந்தாலும் முதலாவதாக வருவது நீ மட்டும் தான். எனக்கு எல்லாவுமாக இருக்கிறாய். நானும் உனக்கு அப்படி இருப்பேன். நீ இன்னும் உயரத்திற்கு செல்ல வேண்டும் என நினைக்கிறேன் என கூறி பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகழின் இந்த வார்த்தைகளை சிவாங்கி கேட்டதும் கண் கலங்கி உள்ளார். மேலும், திரை பிரபலங்கள் பலரும் சிவாங்கிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!