விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் “செல்லமா” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும்
விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் "செல்லமா" சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் “செல்லமா” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனலான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளும், சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தாய் பாசத்தை மையமாக வைத்து “செல்லம்மா” என்ற சீரியல் இன்று முதல் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

செல்லம்மா சீரியல்:

தமிழில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். பிக் பாஸ், பிக்பாஸ் ஜோடிகள், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிரபலங்கள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அதில் அடுத்தடுத்த சீசன்களும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி வருகிறது.

கோபியை பற்றி போட்டுக் கொடுத்த தனம், மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” மகா சங்கமத்தில் அடுத்த ட்விஸ்ட்!

நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி ஆகிய சீரியல்கள் TRPயில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான சீரியல் மூலமாக மக்களை கவருவதில் விஜய் டிவிக்கு தனி பங்கு உண்டு. மேலும் தற்போது மக்களை கவர புது கன்டென்ட் உடன் புதிய சீரியல்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் “செல்லம்மா” என்ற புதிய சீரியல் தொடங்க இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் தாய் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை தான் இது என தெரிகிறது. தனது பெண் குழந்தை சைக்கிள் கேட்டதற்காக சைக்கிள் பந்தயத்தில் அவருடைய தாய் கஷ்டப்பட்டு மூன்றாவதாக வந்து தன்னுடைய குழந்தை கேட்கும் குட்டி சைக்கிளை அவளுக்கு பரிசாக அளிக்கிறாள். இந்த ப்ரோமோ பார்த்தாலே சீரியல் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லாமல் இருக்கிறது. மேலும் இந்த சீரியல் மதியம் 2 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!