விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" ராதிகா, கோபியின் திருமண வைபோகம் - அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ராதிகா, கோபியின் திருமண வைபோகம் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பல்வேறு கதைக்களத்துடன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் வாரம் கோபி ராதிகா திருமணம் நடக்க உள்ள எபிசோடுகள் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ராதிகா, கோபியின் திருமண வைபோகம்:

விஜய் டிவியில் பல்வேறு கதைக்களத்தில் சீரியல்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் ஆகும். இது பெங்காலி சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி ஆக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் விகாஸ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாக்யாவின் கணவர் கோபி, கோபியின் முன்னாள் காதலி ராதிகாவுக்கு ஏற்கனவே விவாகரத்து கிடைத்துவிட்டது. இந்த நிலையில் ராதிகாவின் அம்மா, கோபியை ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்றது, அந்த வகையில் கோபி , பாக்கியாவை விவாகரத்து செய்தால் தான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடியும் என ராதிகாவின் அம்மாவிடம் கூறினார். ராதிகாவின் வற்புறுத்தலால் கோபி, டைவர்ஸ் பேப்பரில் பாக்கியாவிடம் கையெழுத்து வாங்குகிறார். இருவரும் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டில் விவகாரத்துக்காக காத்திருப்பவர்களை பார்த்து பாக்கியா இரக்கப்படுகிறார்.

பாக்யாவுக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என கோபி பயந்து பாக்கியாவை வீட்டிற்கே திருப்பி அனுப்பி விடுகிறார். இதையடுத்து ராதிகாவும் திருமணத்தை நினைத்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். பாக்கியாவினை விவாகரத்து செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ராதிகா மற்றும் கோபியின் திருமண வைபோகம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பாக்கியாவும், அவரது குடும்பமும் கலந்து கொள்ள உள்ளதாக ப்ரோமோவில் காட்டபட்டு உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!