வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி, சூழ்ச்சியால் வெல்லும் வெண்பா – கண்ணம்மாவின் முடிவு!

0
வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி, சூழ்ச்சியால் வெல்லும் வெண்பா - கண்ணம்மாவின் முடிவு!
வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி, சூழ்ச்சியால் வெல்லும் வெண்பா - கண்ணம்மாவின் முடிவு!
வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி, சூழ்ச்சியால் வெல்லும் வெண்பா – கண்ணம்மாவின் முடிவு!

வெண்பா செய்த சூழ்ச்சியால் தான் கண்ணம்மாவை பாரதி சந்தேகப்பட்டு பிரிகிறார். கண்ணம்மாவும் வைராக்கியமாக இருந்து தன் குழந்தையை வளர்த்து வருகிறார். ஆனால் எப்படியாவது கண்ணம்மாவை விட்டு முழுவதுமாக விலக நினைக்கும் பாரதி ஒரு புதிய முடிவை எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பம் முதல் ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. ஆனால் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ரேட்டிங் நிலவரத்தில் சற்று பின்னடைவை பாரதி கண்ணம்மா சந்தித்தது. இதனால் சீரியலில் வரிசையாக பல திருப்பங்களையும் அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள். இதனால் ரேட்டிங் மீண்டும் முன்னிலைக்கு வருகிறது. இந்நிலையில், கண்ணம்மாவை முழுவதுமாக வெறுக்கும் பாரதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முடிவை எடுக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் அலற விட்ட முல்லை காவ்யா – வைரல் வீடியோ!

சௌந்தர்யா மட்டுமே முதலில் கண்ணம்மாவை பற்றிய பேச்சை எடுப்பார். அதனால் பாரதி அதை சமாளித்து வந்தார். ஆனால் தற்போது சௌந்தர்யா மட்டுமில்லாமல் ஹேமா வரை அனைவரும் கண்ணம்மாவை பற்றியே பேசுவதால் பாரதி எரிச்சல் அடைகிறார். இதனால் அதை தவிர்க்க வேறு ஒரு வழியை யோசித்து வருகிறார். இந்நிலையில், தனக்காக இத்தனை வருடங்களாக காத்திருக்கும் வெண்பாவின் நினைவு பாரதிக்கு வருகிறது.

கண்ணம்மாவிடம் இருந்து தப்பிக்க வெண்பாவை திருமணம் செய்வது ஒன்று தான் வழி என்று பாரதி முடிவு செய்கிறார். இதனால் அனைவரையும் மீறி வெண்பாவுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். சௌந்தர்யா உட்பட யாருமே இதை எதிர்ப்பார்க்காத நிலையில் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றனர். தனது சூழ்ச்சியால் தான் வென்று விட்டதை நினைத்து வெண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். கண்ணம்மா இதன் பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்து கதை மாற இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!