BIGG BOSS 6: தனலக்ஷ்மிக்கு ஓவர் டோஸ் விட்ட கமல் – அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்!

0
BIGG BOSS 6: தனலக்ஷ்மிக்கு ஓவர் டோஸ் விட்ட கமல் - அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்!
BIGG BOSS 6: தனலக்ஷ்மிக்கு ஓவர் டோஸ் விட்ட கமல் - அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்!
BIGG BOSS 6: தனலக்ஷ்மிக்கு ஓவர் டோஸ் விட்ட கமல் – அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்!

பரபரப்பாக ஆரம்பித்துள்ள பிக் பாஸ் சீசன் 6 ஆனது வெற்றிகரமாக முதல் வாரத்தை முடித்துள்ள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான அனல் பறக்கும் ப்ரோமோ வந்துள்ளது.

BIGBOSS 6:

கடந்த 5 வருடங்களாக மக்களை அதிகம் ஈர்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் சாராம்சம் என்ன என்று மக்களுக்கு புரியாமல் இருந்தது. உலக நாயகனை பார்க்க வேண்டும் என்ற காரணத்தால் மட்டும் இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களின் உண்டு. நாளடைவில் நிகழ்ச்சியை மக்களும் மிகவும் விரும்ப தொடங்கி விட்டனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கப்பட்டது. இந்த முறை வழக்கத்தை விட அதிகமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். பல்வேறு துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வழக்கத்தை விட மாறுபட்டு இந்த முறை பொதுமக்களில் இருந்து ஒருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு, இதற்கான தேடல்கள் நடைபெற்றது. இறுதியாக டிக் டாக்கில் மிகவும் பிரபலமான தனலட்சுமி என்பவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஈஸ்வரி முன்பே கோபியை அறைந்த ராதிகா.. இரண்டாவது நாளே ரணகளமா இருக்கே – பாக்கியலட்சுமி அப்டேட்!

இந்த வாரம் பிக் பாஸ் வீடு மிகவும் ரணகளமாக இருந்தது. நேற்று டீம்களுக்கான விவாதம் நடந்தது. அதில், தனலட்சுமி சரியாக வேலை செய்யவில்லை என்ற கருத்து வந்தது. இதற்கான வாக்குவாதத்தில் தனலட்சுமி அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில், இன்று கமலின் எபிசோடில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அப்போது கமல், தனலக்ஷ்மியிடம் அழுது கொண்டு வெளியே சென்றால் மக்கள் அப்படியே வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட போகிறார்கள் என்று கூறுகிறார். உங்களுக்கு வெளியேவும் பேசுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. நீங்களாக தான் உருவாக்கி கொண்டீர்கள். அதேபோல், இங்கேயும் உங்களுக்கு வாய்ப்புகளை நீங்கள் தான் ஏற்படுத்த வேண்டும் என்று கூறி செம டோஸ் விடுகிறார். இதை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விடுவது போல் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!