விஜய் டிவி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார்? வெளியான தகவல்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார்? வெளியான தகவல்!
விஜய் டிவி 'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார்? வெளியான தகவல்!
விஜய் டிவி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார்? வெளியான தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இறுதி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களிலும் கலந்து கொண்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் ஜோடிகள்:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை 4 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பங்கு பெற்றவர்கள் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகி சினிமா வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை வைத்து விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

6 மாதத்தில் 36 கிலோ எடையை குறைத்த சின்னத்திரை நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

இதில் ஜூலி, அனிதா சம்பத், ஷாரிக், அரந்தாங்கி நிஷா, சம்யுக்தா, போன்றோர் தன் முயற்சியால் இறுதி நிலைக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் ஆகிய இருவரும் இருக்கின்றனர். இந்த நிலையில் இறுதி எபிசோட் படமாக்கடவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எந்த ஜோடி இப்போட்டியின் வெற்றியாளர் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு WhatsApp அசைன்மென்ட் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அதனை தொடர்ந்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இதுவரை பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற ஓவியா, லாஸ்லியா, ரம்யா பாண்டியன், சாக்ஷி அகர்வால் அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற லாஸ்லியா மற்றும் ஓவியா ஆகியோர் ஒரே நேரத்தில் பங்கேற்பதால் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் பிக்பாஸ் ஜோடிகள் இறுதி நிகழ்ச்சியில் வெற்றியாளர்களாக ஷாரிக் மற்றும் அனிதாவும் அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!