Vijay TV Bigg Boss 5 Promo | 7 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெறும் இமான் அண்ணாச்சி!

0
Vijay TV Bigg Boss 5 Promo | 7 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெறும் இமான் அண்ணாச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo | 7 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெறும் இமான் அண்ணாச்சி!
Vijay TV Bigg Boss 5 Promo | 7 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெறும் இமான் அண்ணாச்சி!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான எபிசோடில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்ற தேர்தலில் இமான் அண்ணாச்சியின் கட்சி 7 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பிக்பாஸ் ப்ரோமோ

ஒரு நாளும் இல்லாத புதுமையாக இன்று ‘பிக்பாஸ்’ வீட்டில் சில ஸ்வாரசியமான சம்பவங்களை நடந்தேறி இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக ஓயாமல் சண்டையிட்டு வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் அதற்கான உண்மை காரணத்தை இப்போது தான் விளங்கிக்கொள்ள துவங்கியுள்ளனர். அந்த வகையில் இதுவரை எலியும் பூனையுமாக சண்டையிட்டு வந்த ராஜு மற்றும் பாவனி இருவரும் மீண்டும் ஒன்றாக கைகோர்த்துள்ளனர். அதே போல கடுமையான வார்த்தைகளை பேசி முட்டி, மோதிக்கொண்டிருந்த ப்ரியங்காவும், தாமரையும் கூட ஒன்று சேர்ந்துள்ளனர்.

தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி போடவில்லை என்றால் அனுமதி இல்லை! அமைச்சர் தகவல்!

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த பெரிய மாற்றம் ஒரே நாளில் நடந்திருப்பதால், ரசிகர்கள் பலரும் இன்னும் ஆச்சரியத்தில் இருந்து மீளவில்லை. இப்படி இருக்க இன்றைய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்குகளை பதிவு செய்கிறார்கள். இதில் இமான் அண்ணாச்சியின் நியாயத்தை பேசும் மக்கள் கட்சி 7 ஓட்டுகளை பெற ப்ரியங்காவின் உரக்கச்சொல் கட்சிக்கு 5 ஓட்டுகள் கிடைக்கிறது.

தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல முகக்கவசம் கட்டாயம் – ஓமைக்ரான் வைரஸ் எதிரொலி!!

இதன் மூலம் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் இமான் அண்ணாச்சியின் மக்கள் கட்சி ஜெயிக்கிறது. இந்த வெற்றியை இமான் அண்ணாச்சியின் கட்சியினரான சிபி, ராஜு, அக்ஷரா உள்ளிட்ட அனைவரும் கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இப்போது பாத் ரூமில் வைத்து ராஜு, சிபி, அண்ணாச்சி மூவரும் பேசிக்கொண்டிருக்க யாருடா இது இந்த கேப்பில் போட்டது என இமான் அண்ணாச்சி கேட்டுக்கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கிச்சன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் சஞ்சீவ் சத்தமாக ஏதோ சொல்வது போல சில புரியாத காட்சிகளுடன் 3வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here