உச்சகட்டத்தில் சண்டை போட ஆரம்பித்த Housemates.. போர்க்களமாக மாறிய பிக் பாஸ் வீடு – அதிர்ந்து போன ஆடியன்ஸ்!

0
உச்சகட்டத்தில் சண்டை போட ஆரம்பித்த Housemates.. போர்க்களமாக மாறிய பிக் பாஸ் வீடு - அதிர்ந்து போன ஆடியன்ஸ்!
உச்சகட்டத்தில் சண்டை போட ஆரம்பித்த Housemates.. போர்க்களமாக மாறிய பிக் பாஸ் வீடு – அதிர்ந்து போன ஆடியன்ஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தற்போது பேக்கரி டாஸ்க் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பாராத விதத்தில் மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இடையே பயங்கர சண்டை வந்துள்ளது. அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஐந்து வாரம் ஆன நிலையில், போட்டியாளர்கள் கடும் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வார தலைவராக விக்ரமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது பேக்கரி டாஸ்க் நடந்து வருகிறது. தொடர்ந்து அடிதடி நடக்க இருக்கும் டாஸ்க்காக பிக்பாஸ் கொடுத்து வருகிறார். தற்போது நடந்து வரும் டாஸ்க்கிலும் மோதல்கள் நடந்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

நேற்றைய எபிசோடில் அசிம் மகேஸ்வரி இடையே சண்டை வந்தது. அதை விக்ரமன் தலைவராக இருந்து சரியான முறையில் வழிநடத்தி சென்றார். அந்த வகையில் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பாராத விதத்தில் மணிகண்டனிற்கும் தனலக்ஷ்மிக்கும் இடையே பயங்கர சண்டை வருகிறது. ஆரம்பத்தில் இருந்து தனலட்சுமி எல்லா பொருள்களையும் எடுக்க அதனால் மணிக்கு பயங்கர கோவம் வருகிறது. உடனே தனலட்சுமி கையில் எடுத்த பொருளை மணி வேகமாக புடுங்குகிறார்.

திரை வீட்டிற்கு அழைக்கும் மூர்த்தி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

அப்போது தனலட்சுமி கீழே விழுந்துவிடுகிறார். அதனால் அவருக்கு பயங்கர கோவம் வர நேராக பேக்கரி சென்று பொருள்களை எடுக்க நினைக்கிறார். ஆனால் அனைவரும் தனலட்சுமியை தடுக்க, உடனே மணி தனலட்சுமி பேக்கரியில் உள்ளதை எடுக்க வருகிறார். அதனால் கோவம் வந்து போடா வாடா என தனலட்சுமி பேச, மணி உனக்கு என்ன வயசு ஆகிறது என சண்டை போடுகிறார். அனைவரும் தடுக்க முயற்சி செய்தும் இருவரும் சண்டை எல்லை மீறி செல்கிறது. இதில் அசிம் கேமரா இருக்கிறது என தனலட்சுமியை சமாதானம் செய்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!