முன்னாள் மனைவியை வீட்டிற்கு அழைத்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
முன்னாள் மனைவியை வீட்டிற்கு அழைத்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் - வைரலாகும் புகைப்படங்கள்!
முன்னாள் மனைவியை வீட்டிற்கு அழைத்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் - வைரலாகும் புகைப்படங்கள்!
முன்னாள் மனைவியை வீட்டிற்கு அழைத்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் சாண்டி மாஸ்டர். அவருக்கு தற்போது திருமணம் முடிந்து இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் முதல் மனைவியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடன இயக்குனர் சாண்டி:

தமிழில் பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருபவர் சாண்டி மாஸ்டர். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவருடைய இயற்கையான நகைச்சுவை குணத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி காஜல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

Exams Daily Mobile App Download

அதன் பின் தற்போது அவர் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லாலா என்ற மகள் இருக்கும் நிலையில் இரண்டாவதாக மகன் பிறந்துள்ளான். இந்நிலையில் சினிமா துறையில் புகழின் உச்சியில் இருந்து வரும் அவர், விரைவில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த வகையில் சாண்டியின் முதல் மனைவி அளித்த பேட்டியில் சாண்டி மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும், சில்வியா சாண்டியை நன்றாக பார்த்து கொள்கிறார். என்னுடன் அவர் பேசுவார் என தெரிவித்து இருந்தார்.

ஜனனி எதுக்கு வெளியே போகணும்.. அவ இங்க தான் இருப்பா.. குணசேகரனை வாயடைக்க வைத்த பாட்டி!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் காஜல் தற்போது சாண்டி வீட்டிற்கு சென்று அங்கே அவரது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார். மேலும் காஜல் அங்கே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் சாண்டியின் குழந்தைகள் என்னை அக்கா என்று தான் அழைக்க வேண்டும் என நகைச்சுவையாக பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!