தீயாய் பரவும் செய்தி.. விஜய் டிவி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான் – எதிர்பாராத போட்டியாளர்!

0
தீயாய் பரவும் செய்தி.. விஜய் டிவி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான் - எதிர்பாராத போட்டியாளர்!
தீயாய் பரவும் செய்தி.. விஜய் டிவி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான் - எதிர்பாராத போட்டியாளர்!
தீயாய் பரவும் செய்தி.. விஜய் டிவி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான் – எதிர்பாராத போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் ஆன நிலையில் 100 நாட்களுக்கு பிறகே வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிய வரும். இந்நிலையில் இந்த சீசனில் வெற்றியாளர் இவராக தான் இருக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் ஒருவருக்கு மட்டும் மக்களின் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவர் தான் வெற்றியாளராக வர வாய்ப்பு உள்ளதாக கணித்து சொல்ல முடிந்தது. ஆனால் இந்த சீசனில் அனைவருமே மக்களின் ஆதரவை பெற்றுள்ளனர். அதாவது சண்டையில் வார்த்தைகளை விட்டாலும், பயங்கரமாக கோபப்பட்டாலும் அசிமிற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதே போல நேர்மைக்கு குரல் கொடுக்கும் விக்ரமனிற்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அடுத்ததாக விளையாட்டு என்று வந்தால் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து விளையாடும் தனலக்ஷ்மிக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் மூன்றாவது முறை வீட்டின் தலைவராக பொறுப்பேற்று கடுமையாக போட்டி போடும் மணிகண்டாவிற்கும் தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் இவர்கள் அனைவரும் டைட்டில் வின்னராக வாய்ப்பு இருக்கிறது.

டிச.10 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் இவர்களின் அனைத்து குணங்களையும் ஒன்றாக சேர்த்தது போல ஷிவின் இருக்கிறார். திருநங்கை சமூகத்திற்கு நல்ல ஒரு உதாரணமாக அவர் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்கிறார். அவருடைய பக்குவமான குணமும் விளையாட்டு திறமையும், நேர்மையும், வெளிப்படையான பேச்சும் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதனால் ஷிவின் பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னராக வருவார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!