எதிர்பாராமல் நடந்த அசிம், ஜனனி சண்டை.. ஒரே டீமில் விக்ரமனுடன் நடந்த வாக்குவாதம் – பிக்பாஸ் ப்ரோமோ!

0
எதிர்பாராமல் நடந்த அசிம், ஜனனி சண்டை.. ஒரே டீமில் விக்ரமனுடன் நடந்த வாக்குவாதம் - பிக்பாஸ் ப்ரோமோ!
எதிர்பாராமல் நடந்த அசிம், ஜனனி சண்டை.. ஒரே டீமில் விக்ரமனுடன் நடந்த வாக்குவாதம் - பிக்பாஸ் ப்ரோமோ!
எதிர்பாராமல் நடந்த அசிம், ஜனனி சண்டை.. ஒரே டீமில் விக்ரமனுடன் நடந்த வாக்குவாதம் – பிக்பாஸ் ப்ரோமோ!

சின்னத்திரையில் பலரது விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் டாஸ்கில் அசிம் ஜனனி இடையே பயங்கர சண்டை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஒரே டீமில் இருக்கும் அசிம் விக்ரம் இடையே சண்டை வருகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களை கடந்துவிட்டது. மேலும் போட்டியாளர்கள் தனி தனியாக விளையாட வேண்டும் என சென்ற வார எபிசோடில் கமல் சார் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதனால் போட்டியாளர்கள் இடையே பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைவரும் கேமில் முழு ஈடுபாடு செலுத்தி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதில் போட்டியாளர்கள் ஏலியன் பிரிவாக தனியாகவும், பழங்குடியினர் பிரிவாக தனியாகவும் விளையாடி வருகின்றனர். மேலும் மற்ற டீம் போட்டியாளர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்த செய்ய வேண்டும் என்பதே இந்த டாஸ்க்காக இருக்க போகிறது. இந்நிலையில் அதில் அசிம் பழங்குடியினர் டீமில் இருக்க, ஜனனி ஏலியன் டீமில் இருக்கிறார். அப்போது ஷிவின் அவர் கோவப்பட்டதாக சொல்ல உடனே அசிம் அவர் கோவப்பட்டதாக சொல்கிறார்.

இணையத்தை பதறவைத்த செய்தி.. பெற்றோரின் வற்புறுத்தல் – மறுமணம் செய்யும் நடிகை மீனா!

Exams Daily Mobile App Download

அதற்கு ஜனனி லூசு மாதிரி பேசாதீங்க என சொல்ல, உடனே அசிம் என்னை லூசு என சொல்வது சரி இல்லை என சத்தமாக பேசுகிறார். உடனே ஜனனி கை நீட்டி பேசாதீங்க என சொல்ல, உடனே அசிம் என்னை அப்படி பேச கூடாது என சொல்ல உனக்கு உரிமை இல்லை என்கிறார். எப்படி என்ன லூசு என சொல்வாய் என அசிம் சத்தம் போட ஜனனியும் கையை நீட்டாதீங்க என சத்தமாக பேசுகிறார். அதன் பின் வெளியான ப்ரோமோவில் ஒரே டீமில் இருந்து கூட அசிம் விக்ரமன் இடையே சண்டை வருகிறது. அசிம் என் தனிப்பட்ட முடிவை வைத்து தான் விளையாடுவேன் என சொல்ல, அதெல்லாம் முடியாது டீம் சேர்ந்து தான் முடிவு செய்வோம் என விக்ரமன் வாக்குவாதம் செய்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!